வாட்ஸ்அப் இறுதியாக ஆண்ட்ராய்டு, iOS பயனர்கள் மிகவும் எதிர்பார்த்த பாதுகாப்பு அம்சத்தை அறிவித்தது. வாட்ஸ்அப் புதிய அம்சத்தை விருப்பப்பட்டவர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் அம்சமாக வெளிவர உள்ளது. வரவிருக்கும் வாரங்களில், வாட்சப் தளம் இதை iOS மற்றும் Android பயனர்களுக்கு வெளியிடும் என்று தெரிகிறது. புதிய அணுகுமுறையுடன் வாட்சப் பயனாளர்களை அதிகரிக்க செய்வதற்காக வாட்ஸ்அப் இப்போது இந்த எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை அறிவித்துள்ளது. சாட் பேக்-அப்புகளுக்கும் வாட்ஸ்அப் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, பேக்கப்களுக்கு என்க்ரிப்ஷன் இல்லாதது தவறாக வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களுக்கு இடம் கொடுத்தது போல இருந்தது.
சாட் பேக்-அப்-களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்த அளவிலான பாதுகாப்பை வழங்கும் ஒரே பெரிய அளவிலான செய்தி சேவை நிறுவனம் என்ற பெயரை வாட்சப் பெற்றுள்ளது. இதில் மெசேஜ் அனுப்புதல், போக்குவரத்து, பெறுதல் மற்றும் கிளவுடில் சேமித்தல் வரை அனைத்திற்கும் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளது பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புதிய அம்சம் முதலில் பீட்டா சோதனையாளர்களுக்கும் இறுதியில் தினசரி பயனர்களுக்கும் கிடைக்கும். அதற்கு முன் புதிய அணுகுமுறையுடன் பயன்பாடுகளை அதிகரிக்க செய்வதற்காக வாட்ஸ்அப் இப்போது இந்த எண்ட்-டு-எண்ட் குறியாக்கத்தை அறிவித்துள்ளது.
தற்போது, வாட்ஸ்அப்பின் பேக்கப் மேனேஜ்மெண்ட் ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற மொபைல் சாதன கிளவுட் பார்ட்னர்களை நம்பியுள்ளது, வாட்ஸ்அப் தரவின் பேக்கப்பை (சாட் மெசேஜ்கள், புகைப்படங்கள் போன்றவை) ஆப்பிள் ஐக்லவுட் அல்லது கூகுள் டிரைவில் சேமித்து வைக்கிறது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பேக்கப்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, ஆப்பிள் ஐக்ளவுட் மற்றும் கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்ட காப்புப்பிரதிகள் வாட்ஸ்அப்பின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனால் பாதுகாக்கப்படவில்லை.
இப்போது, வாட்சப் தளம் இந்த கிளவுட் சேவைகளில் பதிவேற்றப்படுவதற்கு முன்பு பேக்கப்களை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாக்கும் திறனை வழங்கும். எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட பேக்கப்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாட்ஸ்அப் ஒரு ஹெச்எஸ்எம் (வன்பொருள் பாதுகாப்பு தொகுதி) அடிப்படையிலான காப்பு விசை பெட்டகத்தை உருவாக்கியுள்ளது. பேக்கப் என்க்ரிப்ஷன் பயனர் வழங்கிய கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. கடவுச்சொல் வாட்ஸ்அப், பயனரின் மொபைல் சாதன கிளவுட் பார்ட்னர்கள் அல்லது எந்த மூன்றாம் தரப்பினருக்கும் தெரியாது. சாதனம் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அந்த விசையை மீட்டெடுப்பதற்காக பயனரை அனுமதிக்க கீ விசை, HSM காப்பு விசை பெட்டகத்தில் சேமிக்கப்படுகிறது. கடவுச்சொல் சரிபார்ப்பு முயற்சிகளில் குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் தவறான கடவுச்சொல்லை கொடுத்தால், அதன் பிறகு விசையை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றுவதற்கும் HSM காப்பு விசை வால்ட் வழிவகுக்கிறது.