புதிய நிபந்தனைகளை விதித்து கடந்த ஜனவரியில் சர்ச்சையில் சிக்கியது. குறிப்பாக புதிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் சேவையை தொடர முடியும் என்றும், இல்லையென்றால் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தது. தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்வோம் என்ற வாட்ஸ் அப்பின் அறிவிப்பை பயனாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னதான் நிறுவனத்தில் தனியுரிமைக் கொள்கை என்றாலும், பயனர்களுக்கான பிரைவசி என்பதை வாட்ஸ் அப் போன்ற மிகப்பெரிய தகவல் பரிமாற்ற செயலிகள் உறுதி செய்ய வேண்டுமென்று பலரும் கருத்து தெரிவித்தனர். இன்னும் ஒரு படி மேலே போய், பலர் வாட்ஸ் கணக்கில் இருந்து வெளியேறினர். இதனை பயன்படுத்தி டெலிகிராம், சிக்னல் போன்ற பல செயலிகள் உள்ளே நுழையப் பார்த்தன. சுதாரித்துக்கொண்ட வாட்ஸ் அப் நிபந்தனைக்கான கால நேரத்தை நீட்டித்தது.
இந்த கால அவகாசத்திற்குள் பயனாளர்களுக்கு புரிய வைத்துவிடலாம் என நினைத்து தொடர்ந்து நிபந்தனை தொடர்பான தகவல்களை விளக்கமாக கூறி வருகிறது. ஆனாலும் கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும் கொள்கைகளில் மாற்றமில்லை என்பதை வாட்ஸ் அப் தெளிவுபடுத்தியது. அதாவது பிசினஸ் தொடர்பான கணக்குகளுடன் பயனர்கள் செய்யும் உரையாடல்கள் பேஸ்புக் சர்வரில் சேகரிக்கப்படும். இதனை வாட்ஸ் அப் பகிறும். இது விளம்பரங்கள் காட்ட மட்டுமே என்கிறது வாட்ஸ் அப். புதிய பிஸினஸ் வசதிகளுக்கான முதல் அடியாக இதனை வாட்ஸ் அப் எடுத்து வைக்கிறது.
அதாவது வரும் 15ம் தேதி தான் வாட்ஸ் அப் நிபந்தனையை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி தேதி ஆகும். வாட்ஸ் அப் ஏற்கெனவே தெரிவித்த அறிவிப்பின்படி, நிபந்தனையை ஏற்றுக்கொள்ளாத கணக்குகள் டெலிட் செய்யப்படும். அதனால் மே 15க்கு பிறகு நிபந்தனை ஏற்றுக்கொள்ளதவர்களின் கணக்குகள் நிச்சயம் டெலிட் செய்யப்படுமா? அல்லது மேலும் காவ அவகாசம் அல்லது வாட்ஸ் அப் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவருமா என பயனர்கள் எதிர்பார்க்கின்றனர் இதற்கிடையே பயனர்களை விட்டுப்பிடிக்கவே வாட்ஸ் அப் நினைக்கிறது.
கணக்குகள் டெலிட் செய்வது குறித்து பேசிய வாட்ஸ் அப் செய்தித்தொடர்பாளர், ‛மே 15க்கு பிறகு நிச்சயம் எந்த கணக்குகளும் டெலிட் செய்யப்படாது. இந்தியாவில் பயனர்கள் யாருமே பாதிக்கப்படக்கூடாது என்றே வாட்ஸ் அப் விரும்புகிறது. நாங்கள் தொடர்ந்து சில வாரங்களுக்கு பயனர்களுக்கு நினைவூட்டுவோம். இந்தியாவில் பெருவாரியான பயனாளர்கள் வாட்ஸ் அப் நிபந்தனையை ஏற்றுக்க்கொண்டுள்ளனர். சிலருக்கு இன்னும் அதற்காக வாய்ப்புகிட்டவில்லை,’ என தெரிவித்தார்.
உலக அளவில் வாட்ஸ்அப் சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாட்ஸ் அப்பின் இந்த டெட்லைன் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.