முழு ஊரடங்கில் எந்தெந்த கடைகள் திறந்திருக்கும்


 


மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24 ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு


அனுமதி மறுப்பு


*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை தொடரும்


 


*வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் விமானம் மற்றும் ரயிலில் வருவோரை கண்காணிக்க இபதிவு முறை தொடரும்


 


*தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஏசி வசதியின்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்கலாம்


 


*மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் வினியோகம் செய்ய பகல் 12 மணி வரை அனுமதி


 


*மளிகை, காய்கறிகள், இறைச்சி, பலசரக்கு, மீன் கடைகள் தவிர வேற கடைகள் திறக்க அனுமதியில்லை


 


*முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது


 


*ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதி. டீ கடைகள் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி


 


*தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதியில்லை. மருத்துவ பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்படலாம்


 


*உள் அரங்குகள், திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்களுக்கு தடை


 


*ஏற்கனவே அறிவித்த இறப்பு நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை


 


*மாநிலம் முழுவதும் சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை


 


*கோயம்பேடு சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது


 


*தலைமை செயலகம், மருத்துவத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, காவல் துறை, ஊர்காவல்படை. தீயமைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர்ல உள்ளாட்சி துறை, வனத்துறை , கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை தவிர மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்படாது. 


 


*மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அனைத்து போக்குவரத்திற்கு தடை. அத்தியாவசிய தேவைக்கு ஆவணத்துடன் பயணிக்கலாம். 


 


*அனைத்து தனியார் அலுவலங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்க தடை


 


*வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடர்கிறது


 


*சுற்றுலாத் தலங்கள் செல்லவும் தடை தொடர்கிறது


 


*பள்ளிகள், கல்லூரிகள், கோடை கால முகாம்களுக்கு அனுமதியில்லை


 


எதற்கெல்லாம் அனுமதி


 


*பால் வினியோகம், நாளிதழ் வினியோகம், தனியார் விரைவுத் தபால், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள், அனைத்து சரக்கு வாகன போக்குவரத்து, விளை பொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி


 


*ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கும்


 


*நீதித்துறை நீதிமன்றங்கள் செயல்படும்


 


*கட்டடப் பணிகளுக்கு அனுமதி


 


*ஊடக பணியாளர்களுக்கு அனுமதி


 


*பெட்ரோல், டீசல் பங்குகள் அனுமதி


 


*வங்கிகள், ஏடிஎம், வங்கி சார்ந்த போக்குவரத்து 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதி