வாட்ஸ் அப் செயலில் விரைவில் ஸ்டேட்டஸ்களுக்கு க்விக் ரியாக்ட்,  nearby வசதிகளையும் புதிதாக அறிமுகம் செய்ய உள்ளது.

Continues below advertisement

வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்றாகிவிட்டது சூழல். அலுவலக வேலை, தொழில் செய்வது, பண பரிமாற்றம் என பல்வேறு சேவைகளை வாட்ஸ் அப்பிலேயே செய்து முடித்துவிடலாம். அதற்கேற்றவாறு மெட்டா நிறுவனமும் வாட்ஸ் அப் பயனர்களுக்கான பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. 

WABetaInfo வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தியில் மெசேஜ் செய்வதை எளிதாக்குவதற்காக புதிய அம்சத்தை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக வரும் வசதியின் மூலம் கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ளவர்கள் சமீபத்தில் ஆன்லைனில் இருந்தவர்கள் என்பதை நோட்டிஃபை செய்யும் என்று தெரிவித்திருந்தது.

Continues below advertisement

இதோடு ஃபேவரைட் டேப், நோட்ஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அப்டேட்களை வழங்க மெட்டா நிறுவனம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

வாட்ஸ் அப் ஸ்டேடஸ் குயிக் ரியாக்ஷன்

ஃபேஸ்புக். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என்ற மூன்றையும் வைத்துள்ள மெட்டா நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு எல்லா வசதிகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்டேட்களை வழங்கி வருகிறது. இதனால், மூன்று செயல்களிலும் எல்லா வசதிகளும் கிடைக்கும்படியாக இருக்கிறது என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

இப்போது வாட்ஸ் அப் செயலில் ஸ்டேட்ஸில் ஹார்ட் வடிவ லைக் ஆப்சன் விரைவில் வர உள்ளது. இது இன்ஸ்டாகிராமில் உள்ளது. நீங்கள் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் செய்யலாம். அதைவிட Quick ரியாக்ட் செய்து போஸ்ட் பிடித்துள்ளது என்பதை ஒரு லைக் மூலம் தெரிவிக்கலாம். இந்த வசதியும் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு முதலில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nearby Share 

வாட்ஸ் அப்பில் புதிதாக நியர்பை ஷேர் என்ற வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், ஃபோட்டோ, வீடியோ, ஃபைல் உள்ளிட்டவற்றை எளிதாக ஷேர் செய்ய முடியும். ப்ளூடூத் பயன்படும் முறையிலேயே இதுவும் இயங்கும். நியர்பை ஷேர் ஆப்சனை ஆன் செய்தால், அது மற்றொரு  வாட்ஸ் அப் அக்கவுண்ட் உடன் லிங்க் செய்ய அனுமதி கேட்கும்.

இரண்டு டிவைஸ்களும் லிங்க் செய்துவிட்டால் தொடர்பு எண்கள், போட்டோக்கள், வீடியோக்கள் என முக்கியமான டாக்குமெண்ட்களை ஷேர் செய்யலாம். இதற்கு இன்டர்நெட் தேவைப்படாது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் சாட் பாக்ஸில் இனி ஷேர் செய்ய வேண்டியது இல்லை. அதிக MB கொண்ட போட்டோக்கள், வீடியோ,கோப்புகள் ஆகியவற்றை ஷேர் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இந்த நியர்பை ஷேர் ஆப்சன் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை என்பதால் பெரியளவிலான கோப்புகளை எப்படி அனுப்புவது என்ற தயக்கம் வேண்டாம்.

சுற்றுலா செல்லும்போது ட்ரெக்கிங், ஹைக்கிங் செல்கையிலோ இன்டர்நெட் கனக்டிவிட்டி குறைவாக இருக்கும்போது ’ உடனே போட்டோ அனுப்பு’ என்று சொல்லும் நண்பர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாட்ஸ் அப் இந்த அப்டேட்கள் குறித்த அறிவிப்புகளை விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.