Whatsapp Feature : வாட்ஸ் அப்பில் 'kept in chat' என்ற புதிய ஆப்ஷனை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


வாட்ஸ்-அப் செயலி:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன.


அதுவும் பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு இந்த அப்டேட்கள் அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


புதிய அப்டேட்: 


புதியதாக வழங்கப்பட உள்ள அப்டேட்டின் மூலம், disappearing message என்ற option-ல் புதிய வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளது. அதன்படி, ஒருவர் நமக்கு அனுப்பப்படும் மெசேஜ்களை பார்த்தபின்பு விருப்பப்பட்டால் அதனை அழிக்க disappearing message என்ற option-ஐ பயன்படுத்திகிறோம். ஆனால், வரும் காலத்தில் வர உள்ள அப்டேட்டில், 'kept In Chat' என்ற புதிய ஆப்ஷனை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 


இந்த ஆப்ஷன் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவைப்படும் மெசேஜ்களை சேமித்து (save) வைத்துக் கொள்ள முடியும். மெசேஜ்களை சேமித்து வைத்து தேவைப்படும் போது அதனை பார்த்துக் கொள்ளும்படி புதிய வசதி அறிமுகமாக உள்ளது. மேலும், சேமித்து வைத்துக் கொள்ளும் செசேஜ்கள் disappearing ஆகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய வசதியை தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


புதிய அப்டேட்:


Disappearing message என்ற ஆப்ஷனில் வரவிருக்கும் புதிய அப்டேட் உடன் இந்த மேற்கண்ட வசதி அப்டேட் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, disappearing message என்ற option-ஐ 24 நேரம், 7 நாட்கள், 90 நாட்களை மட்டுமே கொண்டு இருந்தது. தற்போது அதில் பல்வேறு ஆப்ஷன்களை  விரைவில் மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


குறிப்பாக, 90 நாட்கள் வரை இருந்த நிலையில், தற்போது 1 வருடம், 180 நாட்கள், 60 நாட்கள், 30 நாட்கள், 21 நாட்கள், 14 நாட்கள், 6 நாட்கள், 5 நாட்கள், 4 நாட்கள, 3 மணி நேரம், 1 மணி நேரம் வரை இதனை பயனர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு வசதியும் இப்போதைக்கு சோதனை முயற்சியிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.