சென்னை: பிரபல குறுஞ்செயலி நிறுவனமான வாட்ஸ்அப் , தனது பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில் மிக முக்கியமான புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி மற்றவர்களுடன் தொடர்புகொள்ள தொலைபேசி எண்களைப் பகிர வேண்டிய அவசியமில்லை; அதற்குப் பதிலாக பிரத்யேக ‘யூசர் நேம்’ மூலமாகவே சாட் செய்ய முடியும்.

Continues below advertisement

இந்தியாவில் 50 ோடி பேர் பயன்படுத்தும் செயலி

சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்தாத ஸ்மார்ட் போன் யூசர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப் நிறுவனம் மற்ற செயலிகளின் போட்டியை சமாளிக்கவும், தங்களின் பயனர்களை தக்க வைக்கவும் அடிக்கடி புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

Continues below advertisement

அந்த வகையில் பயனர்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில், இனி போன் நம்பர் இல்லாமல் யூசர் நேம் வைத்தே பயன்படுத்தலாம். பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் ஆக உள்ளது. இந்த வாரத்தில் இருந்தே பயனர்கள் விருப்பமான பெயர்களை முன்பதிவு செய்யலாம் என்றாலும், இந்த வருட இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்டேட்டில் அப்படி என்ன வசதி?

இதுவரை வாட்ஸ்அப்பில் ஒருவருடன் பேச வேண்டும் என்றால், நமது 10 இலக்க மொபைல் எண்ணை அவர்களிடம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் தேவையற்ற எண்களில் இருந்து அழைப்புகள் வருவது, தனியுரிமை பாதிக்கப்படுவது போன்ற சிக்கல்கள் இருந்தன.

இதற்கு தீர்வாக, மெட்டா நிறுவனம் தற்போது ‘வாட்ஸ்அப் யூசர் நேம்’ (WhatsApp Username) வசதியைக் கொண்டுவந்துள்ளது. டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் இருப்பது போலவே, இனி வாட்ஸ்அப்பிலும் உங்களுக்கென்று ஒரு தனித்துவமான யூசர் நேமை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

உயர்ந்த பட்ச தனியுரிமை (Enhanced Privacy): புதிய நபர்களுக்கோ அல்லது தொழில்முறைத் தேவைகளுக்கோ வாட்ஸ்அப் எண்ணைத் தர விரும்பாதவர்கள், இந்த யூசர் நேமை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் மொபைல் எண் தெரியாததால், முன்பின் தெரியாதவர்கள் உங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தொந்தரவு செய்ய முடியாது.

குரூப்களில் இருக்கும் நபர்களை அவர்களின் யூசர் நேம் மூலமாகவே எளிதாகக் கண்டறிந்து மெசேஜ் அனுப்ப முடியும்.

இது எப்படி செயல்படும்?

பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் (Settings) பகுதிக்குச் சென்று, சுயவிவரப் பக்கத்தில் (Profile Page) தங்களுக்குப் பிடித்தமான யூசர் நேமைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஒருமுறை இந்த யூசர் நேம் செட் செய்யப்பட்டுவிட்டால், யாராவது உங்களைத் தொடர்புகொள்ள நினைத்தால், தேடல் கட்டத்தில் (Search bar) உங்கள் யூசர் நேமைத் தட்டச்சு செய்து கண்டறியலாம். இதன் போது உங்கள் மொபைல் எண் அவர்களுக்குக் காட்டப்படாது.

இருப்பினும், ஏற்கனவே உங்கள் மொபைல் எண்ணைச் சேமித்து வைத்துள்ள உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எந்த மாற்றமும் இருக்காது. அவர்கள் எப்போதும் போல உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

விரைவில் அனைவருக்கும் கிடைக்குமாம்

இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக பீட்டா (Beta) பயனர்களுக்குச் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கும் இந்த அப்டேட் முழுமையாகக் கிடைக்கப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயனர்களிடையே இந்த அப்டேட் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.