வாட்ஸ் அப் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு புதிய AI வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம் ‘personalised AI characters’ உருவாக்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  


வாட்ஸ் அப்:


வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. தொழில்நுப்ட வசதிகளை அவ்வபோது வழங்கி வருகிறது. புதிய அப்டேட்களை உருவாக்கும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 


தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம்.



WhatsApp: AI கேரக்டர் உருவாக்கும் வசதி விரைவில் அறிமுகம் - வாட்ஸ் அப் அப்டேட்!


உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது வாட்ஸ் அப்.  வாட்சப்பில் ”personalised AI characters” உருவாக்கும் அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது. ’Artificial Intelligence (AI)’ வசதியை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருக்கிறது. இப்போது வாட்சப்பில் வர இருக்கிறது.


ஆண்ட்ராய்டு 2.25.1.26 பீட்டா வர்சனில் AI characters  உருவாக்கும் டேப் இருக்கும் என்று WABetaInfo வில் தகவல் வெளியாகியுள்ளது. 


எப்படி பயன்படுத்துவது?


AI ஸ்டூடியோவில் AI - கேரக்ட்டரை உருவாக்க வார்த்தைகளில் விவரிக்க வேண்டும். 1,000 கேரக்ட்டருக்குள் எப்படியான இமேஜ் வேண்டும் என்பதை விவரிக்கலாம். அதற்கேற்றவாறு ஏ.ஐ. தொழில்நுட்பம் கேரக்ட்டரை உருவாக்கும்,. இதற்கென தனியே சாட்பாக்ஸ் இருக்கிறது. 





டாக்குமென்ட் ஸ்கேனர்:


மெட்டா வெளியிட்டுள்ள ஸ்கேனர் வசதி ஐஃபோன் பயனாளர்களுக்கு இப்போதைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு இந்த அப்டேட் எப்போது கிடைக்கும் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விரைவில் எதிர்பார்க்கலாம். 


 



வாட்ஸ் அப்பில் புதிதாக 'Ask Meta AI' என்ற புதிய டேப், இந்த 'Event’ என்ற புதிய டேப் வெளியாக இருக்கிறது. இதன் மூலம் முக்கியமான நிகழ்வுகளை வாட்ஸ் அப்-ல் ரிமைண்டராக வைக்கலாம்.