இன்டர்நெட் வசதியில்லாமலேயே ஃபைல்கள், ஃபோட்டோ ஆகியவற்றை பகிரும் வசதி வாட்ஸ் அப்பில் விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாட்ஸ் அப் தனது  பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றிற்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ளது போன்ற வசதிகளை வாட்ஸ் அப்பிலும் வழங்கிவருகிறது மெட்டா நிறுவனம். வாட்ஸ் அப் குழு வீடியோ கால் வசதியில் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது,  'All', 'Unread', 'Groups'  Images, வீடியோ, லிங்க்ஸ் என சர்ச் டேப், மெட்டா ஏ.ஐ. உள்ளிட்ட அப்டேட்களை வழங்கியிருந்தது. 


Chat செய்வதற்காக தொடங்கப்பட்ட செயலி, தொழில், அலுவலக வேலை உள்ளிட்ட பலவற்றிற்கும் முக்கியமானதாக மாறிவிட்டது. முக்கியமான டாக்குமெண்ட்கள்,  வீடியோ,ஃபோட்டோக்களை அனுப்பவது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் வசதிக்காக ஃபோட்டோ, விடியோ HD தரத்தில் அனுப்புவதற்கான வசதி, அதோடு, அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்களை அனுப்புவது உள்ளிட்ட வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட்களை வெளியிட்டிருந்தது. 


 WABetaInfo-வில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையின்படி, வாட்ஸ் அப் Apple’s Airdrop மற்றும் Google’s Nearby Share ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகள், புகைப்படங்களை இன்டர்நெட் லிமிட் இல்லாமல் அனுப்ப முடியும். அதற்கான ப்ரோகிராம்களை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய தகவல் இல்லை. 


ஆண்ட்ராய்ட், ஐ.ஒ.எஸ். ஆகிய இரண்டிற்கும் தனிதனியாக செயல்படும் முறைகள் மாறுபடாலம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


QR code ஸ்கேட் செய்து அதன் மூலம் தகவல்களை இணையத வசதி இல்லாமல் பகிர முடியும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸ் அப் ஏற்கனவே 2 GB அளவிலான ஃபைல்களை பகிரும் வசதியை கொண்டுள்ளது. லார்ஜ் ஃபைல்களை அனுப்ப புதிய வசதி பயன்படும். நெட்வோர்க் கவரேஜ் குறைவாக இருக்கும் இடங்களிலும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.