ஸ்மார்ட் ஃபோன் யுகத்திற்கு பிறகு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இல்லை என சொல்லலாம்.. உலக அளவில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பல மெசேஜ் ஆப்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் முதல் தேர்வு வாட்ஸ் ஆப்தான்.. காரணம் அது வடிவமைக்கப்பட்ட விதம் சாமானியர்களும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பவும், புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எளிதாக இருக்கிறது. அந்த வாட்ஸ் அப்பினை பயனர்கள் இன்னும் எளிதாக பயன்படுத்த அவ்வபோது வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் வாய்ஸ் மெசேஜில் புது அப்டேட்டை கொண்டு வரவுள்ளது வாட்ஸ் அப். அதன்படி iOS பயனாளர்களுக்கான பீட்டா வெர்ஷனில் இந்த அப்டேட் வந்துள்ளது. அப்டேட்டின்படி, வாய்ஸ் மெசேஜை நாம் க்ளிக் செய்து கேட்டுக்கொண்டே வேறு யாருடனும் நாம் சேட் செய்யலாம். இப்போது உள்ள நடைமுறைப்படி வாய்ஸ் மெசேஜை கேட்டுக்கொண்டே வேறு சேட்டிற்கு செல்ல முடியாது. அப்படி சென்றால் நாம் கேட்கும் வாய்ஸ் சாட் கட்டாகிவிடும். இந்த புதிய அப்டேட்டை WABetaInfo தெரிவித்துள்ளது. WABetaInfo தகவலின்படி 22.1.72 பீட்டா வெர்ஷனில் இது கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைவருக்கும் நடைமுறைபடுத்தப்படும் எனவும் தெரிகிறது. இதில் அடுத்தடுத்த அப்டேட்கள் கொடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டுக்கும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2022ம் ஆண்டிற்கான சில அப்டேட்களை வாட்ஸ் அப் சோதனை முறையில் கொண்டு வந்தது. தற்போது தனிநபர் அல்லது, குரூப் மெசேஜ் வருகிறதெனில் தனிநபரின் பெயரைக் காட்டும் அல்லது இந்த குரூப்பில் இவர் செய்தி அனுப்பியுள்ளார் என நோடிஃபிகேஷன் காட்டும்.. இதில்தான் தற்போது மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது வாட்ஸ் ஆப். அப்டேட்டின் மூலம் தனிநபர் அல்லது குரூப் மெசேஜ் வருகிறது எனில் குறிப்பிட்ட நபர்களின் பெயருக்கு பதிலாக இனி புகைப்படம் நோடிஃபிகேஷனில் வரும்.
ட்விட்டர் போன்ற ஆப்களில் இந்த வசதி ஏற்கெனவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் முதன்முதலில் பீட்டா வெர்ஷன் 2.22.1.1 இல் கொண்டுவரப்பட்டது. இது iOS 15 இன் APIகளைப் பயன்படுத்தி வேலை செய்வதன் காரணமாக இந்த அம்சம் iOS 15 இல் உள்ள TestFlight பீட்டா புரோக்ராம் மூலம் 22.1.71 வெர்ஷன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆப்பிள் ஐபோனின் ஐஓஎஸ் பயனர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த அப்டேட் குறித்த தகவலை Wabetainfo வெளியிட்டது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: வெற்றிமாறனுக்கு அடுத்து சூரியை இயக்கும் அமீர்?