தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள டிப்ளமோ பட்டதாரிகள் உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தமிழக அரசின்கீழ் இயங்கும் பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் தமிழ்நாடு பொதுப்பணித் துறை நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கும் இத்துறையின் கீழ் செயற்பொறியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறையின் கீழ் பயிற்சி பெறுவதற்கான 500 அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சியானது தேசிய தொழிற்பயிற்சித்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நிலையில், டிப்ளமோ பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலம் நடைபெறும் இந்த பயிற்சிக்கு தேர்வாகும் நபர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 8ஆயிரம் மற்றும் ரூ.9 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 500 அப்ரண்டிஸ் நியமனம் செய்யப்படவுள்ள நிலையில் இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்த அனைத்து விபரங்களையும் இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அப்ரண்டிஸ் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 500
வயது வரம்பு – அரசாங்க விதிமுறைகளின் படி வயது வரம்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
தமிழக பொதுப்பணித்துறையில் தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் டிப்ளமோ சிவில் மற்றும் டிப்ளமோ எலக்ரிக்கல் அன் எலக்ட்ரானிஸ் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஜனவரி 25 ஆம் ஆதேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தொழில் பழகுநராக நியமனம் செய்யப்படுவார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.9 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_PWD_2021-22.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப்பணியில் எப்படியாவது சேர வேண்டும் என்ற ஆசையில் உள்ள டிப்ளமோ முடித்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.