உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது. டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. பயனர்களுக்கு பயன்படுத்த எளிதாகவும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் விதமாகவும், பாதுகாப்பு அம்சம் கொண்டதாகவும் வாட்ஸ் அப்பை மாற்றவே அடிக்கடி அப்டேட் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு அப்டேட்டை விரைவில் கொண்டுவரவுள்ளது வாட்ஸ் அப்.
லிங்கில் உங்கள் ப்ரஃபைல்..
நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தும் நபர் என்றால் உங்களது வாட்ஸ் அப் கணக்கை தற்போது QR Code மூலமே சோஷியல் மீடியாவில் பகிர முடியும். அந்த QR Codeஐ ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் கணக்கை யார் வேண்டுமன்றாலும் அடையலாம். போன் நம்பரை கொடுக்காமல் வாட்ஸ் அப் கணக்கை நேரடியாக அடைய இந்த QR Code முறை உதவும். ஆனாலும் முறையாக QR Codeஐ பயன்படுத்த தெரிந்தவர்களால் மட்டுமே இந்த முறையை சரியாக பயன்படுத்த முடியும். அந்த சிக்கலை போக்கவே லிங்க் கொண்டுவரும் முறையை அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப்.
அதாவது உங்கள் ப்ரபைலை ஷேர் செய்யும் ஆப்ஷன் வரவுள்ளது. ஷேர் செய்தால் அது ஒரு லிங்காக உருவாகும். அந்த லிங்கை நீங்கள் எந்த சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்யலாம். அந்த லிங்கை க்ளிக் செய்தாலே போதும். உங்கள் வாட்ஸ் கணக்குக்கு நேரடியாக வரலாம். இந்த அப்டேட் QR Codeமுறையைவிட எளிதான முறையாகும். இது தற்போது சோதனை முறையாக மிகவும் குறைவான பீட்டா பயன்பாட்டாளர்களிடம் சோதிக்கப்படுகிறது. குறிப்பாக பிஸினஸ் கணக்குகளுக்கு இது முதலில் அறிமுகமாகலாம் எனக் கூறப்படுகிறது. இது வரவேற்பை பெறும் பட்சத்தில் விரைவில் அனைவருக்கும் இது அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
முன்னதாக 2022ம் ஆண்டு தொடக்கம் முதலே சில அப்டேட்களை அறிவித்திருக்கிறது வாட்ஸ் அப். பேஸ்புக்கில் உள்ளது போல எமோஜி ரியாக்ஷனை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப். பேஸ்புக்கில் லைக் மட்டுமே செய்யும் வசதி இருந்தது. பின்னர் அது எமோஜி ரியாக்ஷன்களாக அப்டேட் செய்யப்பட்டது. லைக், சோகம், சிரிப்பு என 6 ரியாக்ஷன்கள் கொடுக்கப்பட்டன. அதேபோல் எமோஜி ரியாக்ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது பீட்டா வெர்ஷனில் இது அறிமுகம் ஆகியுள்ளது. நீங்கள் Android 2.22.8.3.பீட்டா வெர்ஷன் நபராக இருந்தால் இந்த அப்டேட் உங்களுக்கு வந்திருக்கும்
அதேபோல புதிதாக குரூப் சாட்டில் Poll ஆப்ஷனை வெளியிட இருக்கிறது வாட்ஸ் அப். Poll ஆப்ஷன் ஏற்கனவே பேஸ்புக்கில் நடைமுறையில் உள்ளது என்பது நாம் அறிந்த விஷயம். வாட்ஸ்அப்பில் எப்படி என்றால், குரூப்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு, பலவித ஆப்ஷனோடு ஓட்டெடுப்பு நடத்தலாம். எந்த ஆப்ஷனுக்கு குழுவின் உறுப்பினர்கள் அதிகம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இறுதியில் அறிய முடியும்.