உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு (Thyroid). இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் (Metabolism) முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த தைராய்டு சுரப்பு அதிகமானால் உடல் எடை குறையும். உடல் சோர்வாக இருக்கும். சாதாரணக் குளிரைக் கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் உடல் எடை அதிகரிக்கும். இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம் உருவாகும். இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது.



குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது. தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism) என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


இந்த தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் பொதுவாக முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலி பிளவர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு அறிவியல் தன்மை உடையது, உண்மையிலேயே தைராய்டு உள்ளவர்கள் இந்த உணவுகளை செரித்துக்கொள்ள கூடாதா என்பது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன?






தி நியூட்ரிஷன் பிரமிட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எந்தவொரு உணவாலும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது" என்று கூறுகிறது. சமைப்பதில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் சாப்பிடக்கூடாதென்று பத்தியம் கூறும் உணவுகளையும் சாப்பிட முடியும் என்று கூறுகிறது அந்த பதிவு. அதாவது தைராய்டு இருக்கிறது என்பதற்காக ப்ராக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டியதில்லை, அதற்கு பதிலாக அவற்றை நன்றாக அவித்து சாப்பிடலாம் என்று கூறுகிறது இந்த பதிவு. அதாவது அப்படி அவித்து சாப்பிடும்போது அதிலுள்ள கோயிட்ரோஜெனிக் அளவுகள் கணிசமாக குறைகிறதாம். கோயிட்ரோஜெனிக் என்பதுதான் உடலில் தைராய்டு குறைபாட்டிற்கு வழிவகுக்கும் கூறு ஆகும். அதோடு அவர்கள் அந்த பதிவில், "அதற்காக இவற்றை நிறைய சாப்பிடலாம் என்றில்லை, ஒரு சிறிய கப்பில் நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு முறை எடுத்துக்கொள்வதே சிறந்தது, அதற்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.