மெட்டா AI தொழில்நுட்பத்தில் வாய்ஸ் மோட் வசதி வாட்ஸ் அப் தளத்தில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


வாட்ஸ் அப் தனது  பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை அவ்வப்போது வழங்கும்.  தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ளது போன்ற வசதிகளை வாட்ஸ் அப்பிலும் வழங்க  மெட்டா நிறுவனம் திட்டமிடுள்ளதாக தெரிகிறது.


வாட்ஸ் அப் குழு வீடியோ கால் வசதியில் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது,  'All', 'Unread', 'Groups'  Images, வீடியோ, லிங்க்ஸ் என சர்ச் டேப், மெட்டா ஏ.ஐ. உள்ளிட்ட அப்டேட்களை வழங்கியிருந்தது. 


முக்கியமான தரவுகள்,  வீடியோ,ஃபோட்டோக்களை அனுப்புவது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் வசதிக்காக ஃபோட்டோ, விடியோ HD தரத்தில் அனுப்புவதற்கான வசதி, அதோடு, அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்களை அனுப்புவது உள்ளிட்ட வசதிகளை வாட்ஸ் அப்பில் கிடைக்கிறது. 


மெட்டா AI தொழில்நுட்பம்:


மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிட்ராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏ.ஐ. வசதியை அறிமுகப்படுத்தியது. உங்களுக்கு ஏதாவது சந்தேகம், தகவல் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கூகுளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இனி, கூகுள் வலைதளத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவாறு மெட்டா அப்டேட் வெளியிட்டிருந்தது.  


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒரு மெசேஜ் செய்தால் போதும். உங்களுக்கு பதில் கிடைக்கும். ஃபோட்டோ உள்ளிட்டவைகளும் கிடைக்கும். 


மெட்டா AI வாய்ஸ் சாட்:


வாட்ஸ் அப் beta for iOS 24.16.10.70 வர்சனில் மெட்டா வாய்ஸ் சாட் செய்யும் வசதி இருப்பதாக WABetaInfo வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Text மற்றும் Voice Mode இரண்டில் எது வேண்டுமோ அதை பயனர் தேர்வு செய்து கொள்ளலாம். Apple Siri, கூகுள் Gemini AI யில் நீங்கள் பேசுவதை வைத்து அது பதில் அனுப்பும். இப்போது மெட்டா AI-யிலும் அந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Brief & Full மோட் என இரண்டு கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கேற்றவாறு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான, சுருக்கமான பதில்கள் கிடைக்கும். இந்த வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கவில்லை. 


QR code ஸ்கேட் செய்து அதன் மூலம் தகவல்களை இணையதள வசதி இல்லாமல் பகிர முடியும் வசதி இன்னும் சில நாட்களில் வெளியாகலாம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸ் அப் ஏற்கனவே 2 GB அளவிலான ஃபைல்களை பகிரும் வசதியை கொண்டுள்ளது. லார்ஜ் ஃபைல்களை அனுப்ப புதிய வசதி பயன்படும். நெட்வோர்க் கவரேஜ் குறைவாக இருக்கும் இடங்களிலும் பயன்படும். 




ஃபேவரைட் லிஸ்ட்:


வாட்ஸ் அப் கான்டெக்ட் லிஸ்டில் உள்ளவர்களில் தேடி உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மெசேஜ் செய்ய வேண்டாம். இப்போது வழங்கப்படுள்ள அப்டேட் இன்னும் வசதியாக இருக்கும். 'favourites List' என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனிநபர், குழு என எதுவாக இருந்தாலும அதை ஃபேவரட் லிஸ்டில் சேர்க்கலாம். இந்த லிஸ்ட் தனியாக இருக்கும்.  வாட்ஸ் அப் Call-களிலும் இந்த வசதி இருக்கிறது. 


PIn Chat என்ற ஆப்சன் இருக்கிறது. இதன்மூலம் மூன்று சாட்களை பின் செய்து வைக்கலாம். இது உங்களின் சாட் லிஸ்டில் முதலில் இடம்பெறும். விரைவில் இதன் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்த்தப்பட உள்ளது.


பயன்படுத்துவது எப்படி?



  •  'All', 'Unread', 'Groups'  Images, வீடியோ, லிங்க்ஸ் என சர்ச் டேப் வசதி இருக்கிறது. சாட் ஸ்க்ரீன்  ‘favorites என்ற ஃபில்டரை க்ளிக் செய்யவும். அதில் உங்களது கான்டெக்ட்களை லிஸ்ட் செய்யவும். வாட்ஸ் அப் கால் டேப்பில் ’Add favorite' என்பதை க்ளிக் செய்து விருப்பமான குரூப் அல்லது கான்டெக்ட்களை சேர்க்கலாம்.

  •  'Settings > Favorites > Add to Favorites' என்ற முறையில் உங்களின் ஃபேவரட் லிஸ்ட்டை சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வரிசையில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.