வாட்ஸ் அப்..


உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சில அப்டேட்களை அளித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளார்களுக்கு ஏற்ப தன்னுடைய வசதியை மேம்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்த எளிமையாக இருக்க வேண்டுமென்பதோடு மட்டுமின்றி பல பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.


இந்நிலையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புது அப்டேட்டை வாட்ஸப் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது விரைவில் சோதனைமுறையில் கொண்டுவரப்பட்டு பின்னர் அனைவருக்கும் இந்த அப்டேட் வருமென  WABetainfo தெரிவித்துள்ளது.


என்ன அப்டேட்?










Rename Linked Decive:


வாட்ஸ் அப் பயன்பாடு எளிதாக இருக்க வேண்டும் எனப்தற்காகவும், எல்லா துறைகளிலும் வாட்ஸ் அப் பயன்பாடு அதிகரித்தையெடுத்து வாட்ஸ் அப் வெப் வசதி கொண்டுவரப்பட்டது. அதாவது, மொபைல் உள்ள வாட்ஸ் அப் அக்கவுண்ட் மூலம் கம்யூட்டரில் கனக்ட் செய்துகொள்ளலாம். நான்கு டிவைஸ்களில் மட்டுமே கன்கட் செய்ய முடியும். எந்த டிவைசில் வாட்ஸப் அக்கவுண்ட் லாகினில் உள்ளதோ அதன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது லாகினில் இருக்கும் டிவைஸ் பெயரை மாற்றியமைக்கும் வசதியை வாட்ஸ் அப் வழங்க இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். வாட்ஸப் பீட்டா பயனர்களுக்கு முதலில் கிடைக்கும் என்றும் விரைவில் அனைவருக்கும் இது கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






Double verification code:


வாட்ஸ் அப் விரைவில் வெப்பில் வாட்ஸ் அப் பயன்படுத்துவதற்கு Double verification code-  முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. நாம் வாட்ஸப் வெப் பயன்படுத்த வேண்டுமென்றால், மொபைலில் உள்ள வாட்ஸ் அப்பில் லிங்க் டிவைஸ் என்ற ஆப்ஷன் வழியே லாகின் செய்ய முடியும். இதக்கு QR கோட் ஸ்கேன் செய்ய வேண்டும். ஆனால், பாதுகாப்பை மேம்படுத்த, புதிதாக மொபைல் நம்பருக்கு 6 இலக்க செக்யூரிட் எண்னை அனுப்பும். வாட்ஸ் அப் வெப்பில் இந்த வெரிஃபிகேசன் எண்களை பதிவிட்டால்தான் வாட்ஸப்பை கம்யூட்டரில் பயன்படுத்த முடியும். இதன்மூலம், வேறு யாராவது உங்கள் அக்கவுண்டை பயன்படுத்த முயன்றால் அது தடுக்கப்படும். இந்த Double verification code வசதியை நாம் எனேபிள் செய்தால் மட்டும் போதும். யாரும் வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை எளிதாக திருடிவிட முடியாது. 


இந்த இரண்டு வசதிகளுக்ம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


Car loan Information:

Calculate Car Loan EMI