பயனர்களை கவரும் விதமாக சோஷியல் மீடியா நிறுவனங்கள் அவ்வப்போது அப்டேட்கள் கொடுத்து வருகின்றன. அதேபோல பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பல அப்டேட்கள் சோதனை முறையில் உள்ளன. அப்படியான ஒரு அப்டேட் தான் மெசேஜ் ரியாக்ஷன்ஸ். இந்த முறை பேஸ்புக், இன்ஸ்டா, சிக்னல், ட்விட்டர், ஐமெசேஜ் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த அப்டேட்டை இத்தனை ஆண்டுகளாக விட்டுவைத்த வாட்ஸ் அப் தற்போது களம் இறக்க தீவிரமாய் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அது என்ன மெசேஜ் ரியாக்ஷன்?
தொடக்கத்தில் பேஸ்புக்கில் கமெண்ட் செய்தால் அதற்கு ரிப்ளையாக எதாவது ஒரு எமோஜியை நாம் போட முடியும். அல்லது லைக் மட்டும் இடமுடியும். பின்னர் லைக் பட்டனை லாங் ப்ரஸ் செய்தால் 7 வகையான எமோஜி வரும் அப்டேட் வந்தது. இதேபோலவான ஒரு அப்டேட் தான் தற்போது வாட்ஸ் அப்பில் வரவுள்ளது. இப்போது யாராவது நமக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்தால் அதற்கு ரிப்ளையாக மட்டுமே எமோஜியை அனுப்ப முடியும். ஆனால் இந்த அப்டேட் அறிமுகமானால் குறிப்பிட்ட மெசேஜ் அருகிலேயே நம்முடைய ரியாக்ஷனை தட்டி விடலாம். இதனால் சேட்டிங் இன்னும் சுவாரஸ்யமாகவும், எளிதாகவும் ஆகும் என யூகிக்கிறது வாட்ஸ் அப்
எப்போது அறிமுகம்?
இப்போது சோதனையில் இருக்கும் இந்த அப்டேட் பீட்டா குரூப்பின் ஒரு பகுதியினரிடையே சோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகும் என்றும் அதன் பின்னர் அனைத்து பயனர்களுக்கும் அப்டேட் ஆகுமென்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் சமீபத்தில் பல முக்கிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு வேறுபட்ட பயனாளர்களுக்கும் பல அப்டேட்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துவண்ணமே உள்ளது. வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக இருந்த வாட்ஸ் அப்பில் , போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தன. இந்த நிலையில் வீடியோ கால் அப்டேட் ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது வாட்ஸ் அப். குரூப் வீடியோ கால் அழைக்கப்பட்ட போது அதில் இணையவில்லை என்றாலும், அதற்கான அழைப்பு வெய்ட்டிங்கில் இருக்கும். அதன் பின்னர் குரூப் காலில் நாம் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட குரூப் இயக்கத்தில் இருக்க வேண்டும். இது கூகுள், ஜூம் மீட் போன்றதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.