பலரும் பயன்படுத்தும் செயலியான வாட்ஸப் தற்போது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்த செய்தியை தற்போது வாட்ஸப் பீட்டா என்னும்  நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. WABetaInfo என்னும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி வாட்ஸப் காலில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனான 2.22.5.4 இல் புதிய வசதிகளுக்கான சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. வாட்ஸப்பில் குழு கால் செய்யும் பொழுது , யார் பேசுகிறார்கள் என்பதை  அறிந்துக்கொள்வதற்காக அலைவரிசை போன்ற வசதியை அறிமுகப்படுத்தவுள்ளார்களாம்.  தற்போது சில பீட்டா பயனாளர்களுக்கு சோதனை வெர்சனை கொடுத்துள்ள வாட்ஸப் , விரைவில் ஆண்ட்ராய்ட்  2.22.5.4 இல் மற்ற பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.







இதில் சோகம் என்னவென்றால் ? முதற்கட்டமாக ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஐஓஎஸ் பயனாளர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனாலும் ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்கு வேறு சில வசதிகளை அறிமுகப்படுத்தவும் வாட்ஸப் திட்டமிட்டிருக்கிறது. அதாவது built-in camera வசதி மற்றும் redesigned caption view போன்றவற்றை அறிமுகப்படுத்துவதற்கான சோதனை முயற்சியில் இருப்பதாக தெரிகிறது. உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.  


டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில், 2022ம் ஆண்டில் சில அப்டேட்களை அறிவித்திருக்கிறது. முன்னதாக  வாட்ஸ் அப் க்ரூப் சாட் பயன்படுத்துபவர்களுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். வழக்கமாக, வாட்ஸ்-அப் க்ரூப்பில் ஒருவரை இணைக்க வேண்டுமென்றால், அந்நபரின் அழைப்பு எண்ணை மொபைல் போனில் பதிவு செய்திருக்க வேண்டும். தெரியாத நபர்களை க்ரூப்பில் சேர்க்க வேண்டுமென்றால்.


ஒவ்வொரு முறையும் அந்நபரின் மொபைல் எண்ணை மொபைல் போனில் பதிவு செய்வது சவாலானதாக இருக்கும். இனிமேல், வாட்ஸ் அப் க்ரூப்பில் சேர்க்க இருக்கும் நம்பரை மொபைல் போனில் பதிவு செய்யாமலே, நேரடியாக வாட்ஸ் அப் க்ரூப்பில் சேர்க்கலாம். க்ரூப் அழைப்பின் லிங்க்-ஐ ஒருவருக்கு அனுப்பினாலே, அவர் அதை ஏற்று க்ரூப்பில் இணையலாம்.