மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்களின் அணுகலை எளிதாக்கும் நோக்கில், மேலும் மூன்று புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.


குவியும் அப்டேட்கள்:


மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தான், சாட் செய்வதையும், நகைச்சுவையாக உரையாடுவதையும் மேம்படுத்தும் வகையில்,  மூன்று புதிய அப்டேட்களை வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்கியுள்ளது.


ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்ஷன்:


அதன்படி, வாட்ஸ்-அப் செயலியில் புதியதாக ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. அதன்படி,  தன்னுடன் வீடியோ காலில் இணைந்துள்ள நபருடன், பயனாளர்கள் தங்களது ஸ்க்ரீனை ஷேர் செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அலுவல் மீடிங்கின் போதும், வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பிக்க இந்த ஸ்க்ரின் ஷேரிங் ஆப்ஷன் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதே அம்சங்களை ஏற்கனவே கொண்டுள்ள கூகுள் மீட் மற்றும் ஜும் ஆகிய செயலிகளுக்கு மாற்றாகவும் வாட்ஸ்-அப் செயலி அமையும் என கூறப்படுகிறது.


எப்படி பயன்படுத்துவது?



  • வாட்ஸ்-அப் செயலியை திறந்து அடிப்பகுதியில் பாருக்கு செல்லவும்

  • கேமரா சுவிட்ச் ஆப்ஷனுக்கு அடுத்துள்ள புதிய ஐகானைப் பார்க்கவும்.

  • திரைப் பகிர்வு அம்சத்தைச் செயல்படுத்த ஐகானைத் தட்டவும்.

  • ஒரு பாப்-அப் பெட்டி தோன்றும், உங்கள் ஃபோன் அனுப்பப்படுவதைப் பற்றி எச்சரிக்கும்.

  • உங்கள் திரையை மற்றவருடன் பகிரத் தொடங்க "இப்போது தொடங்கு" என்பதைக் கிளிக் செய்யவும்.

  • திரைப் பகிர்வு வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், "உங்கள் திரையைப் பகிர்கிறீர்கள்" என்ற செய்தியைப் பெறுவீர்கள்.


மீடியா ஷேரிங் ஆப்ஷன்:


இதுவரை ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை மற்றொருவருடன் பகிர தேர்வு செய்யும்போது டிக் குறியீட்டுடன் பெட்டி மட்டுமே தோன்றும். இனி, தேர்வு செய்யப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு எண் குறியீடுகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்வது எளிதாகும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


சைலன்ஸில் போடும் வசதி:


மேற்குறிப்பிட்ட இரண்டு அம்சங்களும் தற்போது சோதனை முயற்சியில் இருக்கிறது. விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான், தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை வாட்ஸ்-அப்பில் தாமாகவே சைலன்ஸில் போடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்த, செட்டிங்ஸ் அம்சத்தில் பிரைவசிக்குள் சென்று கால்ஸ் எனும் பிரிவில் “2silence unknown calls” என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன்மூலம், அநாவசிய தொந்தரவுகளை பயனாளர்கள் தவிர்க்கலாம் என, மெட்டா குழும தலைவர் மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.