Whatsapp India Head Resigns: முன்னனி தகவல் தொடர்பு வலைதளமான வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி அபிஜித் போஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 


அபிஜித் போஸின் பதவி விலகலுக்குப் பிறகு வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி,  வில் கேத்கார்ட் கூறுகையில், “இந்தியாவில் எங்கள் முதல் வாட்ஸ்அப் தலைவராக அபிஜித் போஸின் மகத்தான பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவரது செயல்பாடு, மில்லியன் கணக்கான மக்கள் மற்றும் வணிகங்களுக்குப் பயனளிக்கும் புதிய சேவைகளை வழங்க எங்கள் குழுவுக்கு உதவியது. இந்தியாவிற்கு வாட்ஸ்அப் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும், மேலும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்த தொடர்ந்து உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”என்று  தெரிவித்துள்ளார்.