வாட்ஸ் அப் செயலியின் டிசைன் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் சாஃப்வேர் இரண்டிற்கும் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. 


மெட்டாவின் வாட்ஸ் அப் தங்கள் பயனாளர்களின் வசதிற்கு ஏற்பட பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. சமீபத்தில்,கான்டெக்ட் லிஸ்டில் இல்லாமலேயே தொடர்பு எண்ணை கொண்டு கால் செய்யும் ’in-app dialer’ முறை விரைவில் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதோடு பல்வேறு அப்டேட்கள் வரவிருப்பதாக தெரிவித்திருந்தது மெட்டா. 




புதிய டிசைன்


வாட்ஸ் அப்பில் செய்யப்பட்டுள்ள புதிய அப்டேட்டில் ஐகான், கலர் பேலட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கொடுப்பட்ட நீலம், பச்சை மிக்ஸ் ஷேட் மாற்றப்பட்டுள்ளது. புதிதாக பச்சை நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. 


வாட்ஸ் அப் மேலே புதிய சர்ச் டேப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 'All', 'Unread', 'Groups' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் பச்சை நிற டோனில் உள்ளது. இதன் மூலம் எளிதாக படிக்காத மெசேஜ்கள், வாட்ஸ் அப் குழு மெசேஜ்கள் என எளிதாக எடுக்க முடியும். அதோடு, சர்ச் டேப்பில் தேவையான மெசேஜ், ஃபோட்டோ, ஃபைல்களை தேடி எடுக்கலாம். 



டார்க் மோட்


வாட்ஸ் அப் ‘டார்க் மோட்’ மாற்றப்பட்டுள்ளது. அதிக க்ரே ஷேட் உடன் புதிய டார்க் மோட் இருக்கும். குறைவான ஒளியிலும் வாட்ஸ் அப்பில் உள்ள மெசேஜ்களை நன்றாக பார்க்க இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.


வாட்ஸ் அப்பில் புதிய ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு, புதிய இமோஜி, ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 


வாட்ஸ் அப்பில் விரைவில் வெளியாகும் அப்டேட்கள்


ஹிட்டன் குரூப்


 வாட்ஸ் அப் குழுவில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஒரு குழு இருப்பது குறித்து அறிய முடியும். இன்வைட் லிங்க் இருப்பவர்கள் மட்டுமே குழுவின் விவரங்களை அறிய முடியும். அதாவது குழுவை நிர்வகிப்பவர்கள் யாரெல்லாம் வாட்ஸ் அப் குழுவின் விவரங்களை காண முடியும் என்பது பற்றி தெரிந்துகொள்ள முடியும். இந்த அப்டேட் எப்போது வரும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.


 




 


வீடியோ மெசேஜ் ஃபார்வேர்ட் செய்யும் வசதி


வாட்ஸ் அப்-ல் ஆடியோ மெசேஜ் போலவே வீடியோ மெசேஜ் அனுப்பு வசதி அறிமுகப்படுத்தியிருந்தது. இப்போது வீடியோ மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்யும் வசதி உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் பொதுவாக அனுப்ப வேண்டிய மெசேஜ்களை ஒவ்வொரு முறையும் ரெக்கார்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.


இப்போது வாட்ஸ் அப் செயலில் ஸ்டேட்ஸில் ஹார்ட் வடிவ லைக் ஆப்சன் விரைவில் வர உள்ளது. இது இன்ஸ்டாகிராமில் உள்ளது. நீங்கள் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் செய்யலாம்.  Quick ரியாக்ட் செய்து போஸ்ட் பிடித்துள்ளது என்பதை ஒரு லைக் மூலம் தெரிவிக்கலாம். இந்த அப்டேட்கள் விரைவில் கிடைக்கும்.