Whatsapp Feature: வணிகத்தை மேம்படுத்தும் மற்றும் பயனாளர்களை அசத்தும் வகையில்  புதிய  அம்சங்களை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்துகிறது. 


வாட்ஸ் அப்:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், பயனாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாகவும், அவர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது பல்வேறு புதிய அப்டேட்டுகளை மெட்டா கொண்டு வர உள்ளது. 


புதிய வசதி:


அதாவது, வாட்ஸ் அப் செயலியில் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அம்சங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. அதாவது, கூகுள் பே, போன் போ போன்றவைகள் மூலம் வாட்ஸ் அப்பில் பணம் அனுப்பலாம். ஏற்கனவே பேமெண்ட் (Payment) என்ற ஆப்ஷன் உள்ளது. இது வங்கிக் கணக்குடன் மட்டுமே இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது யுபிஐ ஆப்ஸ்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலமும் பணத்தை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


அதோடு இல்லாமல் ஸ்விகி, சோமேட்டோ போன்று வாட்ஸ் அப்பில் சாப்பாடு ஆர்டர் செய்யும் வசதியும் அறிமுகமாக உள்ளது.  மேலும், விமான டிக்கெட்டுகளை முன்பதிவும் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளதாக மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.


இதோடு இல்லாமல்,  தேவையான பொருட்களை விருப்பப்பட்ட நிறுவனங்கள் மூலம் ஆர்டர் செய்வது போன்ற வசதியும் அறிமுகமாக உள்ளது. அதாவது, பிளிப்கார்ட், அமேசானில் எப்படி ஆர்டர் செய்கிறோமோ, அதேபோன்று வாட்ஸ் அப்பில் தேவையானவற்றை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த வசதிகளை ஒருவரின் சாட்டில் இருந்து வெளிவராமலேயே பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதிகள் அனைத்தும் எப்போது அறிமுகமாகும் என்பது போன்ற தகவல்கள் தற்போது வரை  வெளியாகவில்லை.


அண்மையில் வந்த வசதி:


சமீபத்தில் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சேனல்கள் என்பது  உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்ப உதவும் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும். பயனர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பத்தின் பேரில் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுக்க ஒருவித கோப்பகத்தை ( searchable directory ) வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்குகிறது.


அதனை பயன்படுத்தி பொழுதுபோக்குகள், விளையாட்டுக் குழுக்கள், உள்ளூர் செய்திகள் போன்றவை தொடர்பான சேனல்களை விருப்பத்தின் பேரின் பயனாளர்கள் தேர்வு செய்யலாம். சாட், இமெயில் மற்றும் ஆன்லைன் பதிவுகளில் இருந்து கிடைக்கப்பெறும், இணைய முகவரிகள் மூலமாகவும் பயனர்கள் செய்திகளை அறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Samudrayaan Mission: சூரியன் சந்திரன்.. அடுத்த டார்கெட் கடல்தான்.. மனிதர்களை கடலுக்குள் அனுப்பும் சமுத்ரயான் திட்டம்.. முழு விவரம் இதோ..


Twitter Down: கடந்த 24 மணிநேரத்தில் இரண்டாவது முறையாக முடங்கிய X.. காரணம் என்ன..? கேள்வி எழுப்பும் பயனர்கள்!