வாட்ஸ்அப் சமீபத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் ஆடியோ அழைப்புகளுக்கான புதிய அம்சத்தை வெளியிட்டது. அதாவது, ஜூம் காலில் இணைப்பை பயன்படுத்தி எவ்வாறு வீடியோ மற்றும் ஆடியோ காலை பேச முடியுமோ? அதேபோல வாட்ஸப்பிலும் இனி செய்ய முடியும். முதலில் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி , தற்போது ஐ.ஓ.எஸ். பயனாளர்களுக்கும் கிடைக்கிறது.
உங்கள் வாட்ஸ்அப்பில் இந்த வசதி இல்லையா ?
உங்கள் Google Play store அல்லது Apple App Store இலிருந்து வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள். அப்டேட் செய்தவுடன் சமீபத்திய பதிப்பு 2.22.21.83 தானா அது என்பதை சரிப்பார்த்துக்கொள்ளுங்கள் , ஏனென்றால் இந்த வசதியை 2.22.21.83 வெர்சனில் மட்டுமே பெற முடியும்.
எப்படி லிங்கை உருவாக்குவது ?
உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் விண்டோவைத் திறந்து அழைப்பு அழைப்புகள் வசதிக்கு செல்லவும்.
‘create call link' என்ற பெயரில் ஒரு வசதியை காண்பீர்கள்.
‘create call link’. அம்சத்தை கிளிக் செய்தவுடன், பல வசதிகள் இருக்கும்.
அதில் குரல் அழைப்பா? அல்லது வீடியோ அழைப்பா? என்பதை தேர்வு செய்யவும்
இதனை வாட்ஸ் அப் வழியாகவோ அல்லது குறுஞ்செய்தி வழியாகவோ நீங்கள் அனுப்பலாம். இதற்காக லிங் வசதி , ஷேரிங் வசதி மற்றும் நகலெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பத்தைத் தேர்வுசெய்து, உங்கள் தொடர்புடன் இணைப்பைப் பகிர தொடரலாம். வாட்ஸ் அப்பில் உருவாக்கப்பட்டிருப்பதால், அந்த லிங்க் உங்கள் ஃபோன் எண்ணைப் பகிரும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வீடியோ அல்லது ஆடியோ அழைப்பிற்கு செல்லும் பொழுது Leave for leaving the call ,Joining the call என்னும் இரண்டு வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம். ஒருமுறை, பங்கேற்பாளர் அழைப்பு இணைப்பில் பங்கேற்றால், அழைப்பு தானாகவே குழு அழைப்பாக மாற்றப்படும்.
create call link அம்சத்தின் மூலம் செய்யப்படும் அழைப்புகள் என்க்ரிப்ட் செய்யப்பட்ட என்க்ரிப்ஷனாக இருக்கும் என்றும், அழைப்பில் சேராதவர்கள் எந்த உரையாடலையும் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் இந்த புதிய வசதியில் 8 பேர் மட்டுமே ஆடியோ காலில் பங்கேற்க முடியும் . மேலும் 32 பேர் இந்த இணைப்பை பயன்படுத்தி வீடியோ கால் குழுவில் இணைந்து பேச முடியும்.