WhatsApp Update:வாட்ஸ் அப் வீடியோ காலில் ஃபில்டர் வசதி அறிமுகம்:புதிய அப்டேட் - பயன்படுத்துவது எப்படி?

WhatsApp Update:வாட்ஸ் அப் வீடியோ கால் வசதியில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

வாட்ஸ் அப் (WhatsApp) வீடியோ கால் வசதியில் Backgrounds, Filters வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

Continues below advertisement

வாட்ஸ் அப்  பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வபோது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ளது போன்ற வசதிகளை வாட்ஸ் அப்பிலும் வழங்க  மெட்டா நிறுவனம் திட்டமிடுள்ளதாக தெரிகிறது.

வீடியோ கால் ஃபில்டர்:

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் புதிய வர்சனில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. 
வீடியோ கால் வசதியில் ஃபில்டர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வீடியோ காலில் Background மாற்றி கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோ கால் பயன்படுத்தும்போது அதன்  Background மாற்றிகொள்ள முடியும். இப்போது இந்த வசதி வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வசதி டீம்ஸ் (Teams), கூகுள் மீட் (Google Meet) ஆகிய ப்ளாட்ஃபாம்களில் இந்த வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த அப்டேட் இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீடியோ காலில் இனி உங்களுக்குப் பிடித்த எஃபக்ட்கள், background  மாற்றிக்கொள்ளலாம். வீடியோ கால் ஸ்க்ரினில்  “Magic Wand” ஐகான் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. 

பயன்படுத்துவது எப்படி?

  • ஆண்ட்ராய், IOS ஸ்மார்ட்ஃபோனக்ளில் முதலில் வாட்ஸ் அப் சமீபத்திய வர்சனை அப்டேட் செய்யவும்.
  • வாட்ஸ் அப்பில் வீடியோ கால் செய்யவும்.
  • வீடியோ கால் ஸ்கிரினில் “Magic Wand” டூல் இருக்கும். தனிப்பட்ட, குழு வீடியோ கால் இரண்டிலும் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 
  •  “Magic Wand”  க்ளிக் செய்தால் அதில் Filters மற்றும் Backgrounds ஆப்சன் வழங்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு தேவையான ஒன்றை க்ளிக் செய்யவும்.
  • வீடியோ காலில் ஃபில்டர், Background மாறியிருக்கும்.

வாட்ஸ் அப் குழு வீடியோ கால் வசதியில் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது,  'All', 'Unread', 'Groups'  Images, வீடியோ, லிங்க்ஸ் என சர்ச் டேப், மெட்டா ஏ.ஐ. உள்ளிட்ட அப்டேட்களை வழங்கியிருந்தது. 

முக்கியமான தரவுகள்,  வீடியோ,ஃபோட்டோக்களை அனுப்புவது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் வசதிக்காக ஃபோட்டோ, விடியோ HD தரத்தில் அனுப்புவதற்கான வசதி, அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்களை அனுப்புவது உள்ளிட்ட வசதிகளை வாட்ஸ் அப்பில் கிடைக்கிறது.

QR code ஸ்கேன் செய்து அதன் மூலம் தகவல்களை இணையதள வசதி இல்லாமல் பகிர முடியும் வசதி இன்னும் சில நாட்களில் வெளியாகலாம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸ் அப் ஏற்கனவே 2 GB அளவிலான ஃபைல்களை பகிரும் வசதியை கொண்டுள்ளது. லார்ஜ் ஃபைல்களை அனுப்ப புதிய வசதி பயன்படும். நெட்வோர்க் கவரேஜ் குறைவாக இருக்கும் இடங்களிலும் பயன்படும். வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்து புதிய அப்டேட்களை வழங்க தயாராகி வருகிறது மெட்டா நிறுவனம். 


 

Continues below advertisement
Sponsored Links by Taboola