மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் இந்தியா முழுவதும்  கடந்த ஜனவரி மாதம் மட்டும்  29 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளைத் தடை செய்துள்ளது. 


 தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்திய மாதாந்திர அறிக்கையின் ஜனவரி பதிப்பில் செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்ஆப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 


கடந்த ஜனவர் மாதம் 1 தேதி முதல் 31 ஆம் தேதி வரைஒ இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸப்பிற்கு ஆயிரத்து 461 புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் 195 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,337 கணக்குகள் மீது விதிகளை மீறப்பட்டதற்காக புகார்கள் வந்துள்ளதாகவும், 191 வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸப் விதிமுறைகளை மீறியதாக கிடைத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 51 கணக்குகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. 5 வாட்ஸப் கணக்குகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.


இது தொடர்பாக வாட்ஸ் நிறுவனம் கூறுகையில், “ பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயன்பாட்டில் இல்லாத, புகார்கள் வரும் கணக்குகள் தடை செய்யப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். வாட்ஸப்பில் விதிமீறல்கள் நடப்பதை குறைப்பதை நோக்கமாக கொண்டு செயல்ப்பட்டு வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.


வாட்ஸ் அப் பல தவறான செயல்களுக்காகவும் பயன்படுத்துவது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததையெடுத்து 29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். அப்படி மாதாமாதம் எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை வாட்ஸப் பகிர்வது வழக்கமாகும்.