Whats App Update : தேவைக்கேற்ப ஒரு நாள், ஒரு வாரம் அல்லது தேதி குறிப்பிட்டு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.


வாட்ஸ்-அப் செயலி:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.  அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில் தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


புதிய அப்டேட்


நாம் அனைவரும் வெளியூர்களுக்கு நண்பர்களுடன் செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரு குரூப், பிறந்தநாள் கொண்டாட்டம் போன்று பல குரூப்களை தொடங்கி அதில் சில தகவல்களை பரிமாரிக்கொள்வோம். அதுமட்டுமில்லாமல், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என அனைத்திற்குமே நாம் ஒரு குரூப்பை உருவாக்குவோம். ஆனால் அதில் அதிகபட்சம் ஒரு மாதம் அக்டீவ்வாக இருப்போம். அதன்பின்பு அந்த குருப் என்னாச்சு என்று கூட சிந்திப்பதில்லை. இதுபோன்று தற்காலிகமாக உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குரூப் பற்றி ஒரு புதிய அப்டேட் வெளிவர உள்ளது.


அதன்படி, குரூப் உருவாக்கும் பயனர்கள் (admine) குரூப் உருவாக்கப்படும் போது தேவைக்கேற்றப்படி ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வாரம் அல்லது குறிப்பிட்ட தேதி வரை இதனை வடிவமைத்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தற்காலிகமாக உருவாக்கப்படும் குரூப்களின் காலம் முடிந்துவிட்டதாக பயனர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  expiring groups என்ற அம்சம் இருந்தால் வாட்ஸ் அப் Chat space குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


அண்மையில் வந்த அப்டேட்


தற்போது வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. வழக்கமாக வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்கும்படி இருந்தத- இதில் வீடியோக்களை அதிகபட்சமாக 30 விநாடிகள் மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். 


இந்த வீடியோ ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் தானாகவே டெலிட் ஆகிவிடும். அதே போல இனி வாய்ஸ் நோட்களையும் 30 நொடிகள் ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சம் நேற்று முதல் பயனர்களுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அத்துடன் இந்த வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டம் என்பதையும் பயனர்கள் நிர்வகித்துக் கொள்ளும் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.