வாட்ஸ்  ஆப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. 


மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக கம்யூனிட்டிஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் 32 நபர்கள் குரூப் வாய்ஸ் காலில் இணைய முடியும். இதுமட்டுமன்றி 2 ஜிபி அளவிளான ஃபைல்களையும் ட்ரான்ஸ்பர் செய்ய முடியும். இந்த கம்யூனிட்டிஸ் வசதி மூலம், குரூப் சாட்களை ஒழுங்குபடுத்தி, செய்திகளை நம்மால் எளிதாக கண்டறிய முடியும். இந்த கம்யூனிட்டிஸ் வசதி மூலம் தனித்தனி குழுக்களை, ஒரே கம்யூனிட்டிக்கு கீழே கொண்டு வந்த செய்திகளை பார்ப்பதோடு, பகிரவும் முடியும். தற்போது வரை எட்டு பேர் மட்டுமே வாட்ஸ் அப்பில் குரூப் காலில் இணைய முடியும் என்ற நிலைமையும், 1 ஜிபிக்குள்ளான ஃபைல்களை மட்டுமே ஷேர் செய்ய முடியும் என்ற நிலைமை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 






வாட்ஸ் குரூப்பின் அட்மின், எந்த நேரம் வேண்டுமென்றாலும், அதில் பதிவிடப்படும் செய்திகளை டெலிட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டெலிட் செய்யப்படும் செய்திகளை குரூப்பில் உள்ள யாரும் பார்க்க முடியாது. இந்த வருடத்தின் இறுதியில், இந்த ஆப்ஷன் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 






வாட்ஸ் ஆப்பில் இருக்கும் எண்ட்-டூ-எண்ட் என்க்ரிப்ஷன் எனும் பாதுகாப்பு அம்சம் இதிலும் இருக்கிறது. அண்மையில்  வாட்ஸ் ஆப்பில் எம்மோஜி ரியாக்‌ஷன்கள் பயன்படுத்துவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.