குறைந்த அலைவரிசை மற்றும் வேகம் குறைவது காரணமாக இணையம் நமது முக்கிய வேலைகளை பாதிக்கும் சூழலை நாம் அனைவருமே எதிர்கொண்டு இருப்போம். நமது கம்ப்யூட்டரில் பின்னணியில் இயங்கும் கோப்புகளின் நிலை, மேலும் மூடப்படாத பல பக்கங்கள் என இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவை அத்தனையுமே கணினியின் நெட்வொர்க் வேகத்தை பாதிப்பதாக இருக்கிறது.


ஆனால் இந்தப் பிரச்னையை சீராக்க முடியும் மற்றும் இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் இணையம் வேகமாக செயல்பட வைக்கவும் முடியும் என்கிறார்கள் டெக் கீக்கள்.


இந்த பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?


உங்களது லேப்டாப், மொபைல் என எதிலும் பல்வேறு கேஷேக்கள் இயங்கும்போது அவை இயந்திரத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும். எனவே, கருவியின் யூஸர் டேட்டாவை சேமிக்கும் தற்காலிகச் சேமிப்பில் உள்ள டேட்டாவை அழிப்பதன் மூலம் ஒருவர் இணைய வேகத்தை அதிகப்படுத்த முடியும். தற்காலிகச் சேமிப்பை அழிக்க யூஸர்கள் ப்ளே ஸ்டோர் ஆப்களைப் பதிவிறக்கலாம் அல்லது மை ஃபைல்ஸ் பகுதியைப்  பார்வையிட்டு ஹிஸ்டரியை நீக்க கேஷ் ஆப்ஷனைத் தேர்வுசெய்யலாம்.


உங்கள் ஸ்மார்ட் கருவிகளில் பயன்படுத்தப்படாது இருக்கும் யூசேஜ்களை நீக்கவும்: 


சில பயன்பாடுகள் அதிக இடத்தை ஆக்கிரமித்து அப்ளிகேஷன்களின் வேகத்தை பாதிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. நீங்கள் உங்கள் கருவியை அரிதாகவே பயன்படுத்தினாலும் பரவாயில்லை, ஆப்ஸ் உங்கள் கருவியில் இடத்தை ஆக்கிரமித்திருந்தால், அது செயல்படும் வேகத்தை பாதிக்கும்.


எனவே, உங்கள் கருவியின் முன் ஸ்கீரின்ல் இருந்து விட்ஜெட்களை அகற்றுவது உங்களுக்கு உதவியாகச் செயல்படலாம் மற்றும் அதற்கு ஏற்ப உங்கள் கருவியின் வேகத்தை மேம்படுத்த உங்களுக்கு உதவலாம். பின்புலத்தில் இயங்கும் மற்றும் பயன்பாட்டில் இல்லாத அப்ளிகேஷன்களும் அதிக டேட்டாவைப் பயன்படுத்துகிறது மற்றும் அதற்கேற்ப உங்கள் ப்ரவுஸரை அது மெதுவாக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.


ரீடர் முறையை இயக்கவும்:


நீங்கள் வேகமான இணையத்தை உபயோகிக்க வேண்டும் என்றால், இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். வெப் பேஜ் அல்லது டாகுமெண்ட்களைப் படிக்கும்போது ரீடர் முறையை பயன்படுத்துவது கூடுதல் டேட்டாக்களை தரவிரக்கம் செய்யாமல் படிக்க மட்டுமே செய்ய பயனருக்கு உதவுகிறது மற்றும் பிரவுசரில் தோன்றும் தேவையற்ற படங்களை மறைக்கிறது, இது தரவைப் பதிவிறக்குவதற்கு குறைந்த நேரத்தையும் குறைந்த அளவிலான இணையத்தையும் பயன்படுத்துகிறது. பயனர்கள் தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப ரீடர் பயன்முறையை செயல்படுத்தலாம். இந்த அம்சம் பயனாளர்கள் எளிதில் வெப்சைட்டில் ஒரு பகுதியை லோட் செய்து படிக்க உதவுகிறது.