நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்று, கடந்த வாரத்தில் டீசர் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி முதல் உலகமெங்கும் நடிகர் அஜித் திரைப்படம் வெளியான நிலையில், கரூர் நகரப்பகுதியில் உள்ள அஜந்தா, அமுதா, திண்ணப்பா, கலையரங்கம் உள்ளிட்ட திரையரங்குகளில் இன்று முதல் காட்சி தொடங்கியது. 


 




நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித் வலிமை திரைப்படம் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் அவர்களுடைய கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம், பீர் மற்றும் தாரை தப்பட்டைகள் வாணவேடிக்கைகள் பட்டாசுகள் வெடித்து தங்களது கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்கம் வந்திருந்தனர். தமிழகத்தில் இன்று அதிகாலை நான்கு மணிக்கே திரைப்படம் வெளியான நிலையில் கரூர் மாவட்டத்தில் 10.30 முதல் காட்சி தொடங்கி நாள்தோறும் நான்கு காட்சிகளாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. குறிப்பாக கரூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான அஜித் ரசிகர்கள் தங்களது நண்பர்களுடன் திரைப்படத்தை காண வந்திருந்தனர். சில பெண்களும் அஜித் வலிமை திரைப்படத்தை பார்க்க குடும்பத்துடன் திரையரங்கம் வந்திருந்தனர்.




 


கரூர் நகரத்தில் உள்ள திண்ணப்பா மற்றும் கலையரங்கத்தில் அதிகளவில் அஜித் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்தில் கொண்டாடினர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜீத் நடித்து வெளியான வலிமை திரைப்படத்தின் இயக்குனர் வினோத் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது கூடுதல் தகவல். அதேபோல் கரூர் மாநகர திரையரங்குகளில் டிக்கெட்டின் விலை ரூபாய் 190  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


 


கரூர் கலையரங்கம் திரையரங்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள் அஜித் கட் -அவுட்டை இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.  அதைத் தொடர்ந்து கலையரங்கம் தியேட்டர் வாசலில் ரசிகர்கள் பால் பாக்கெட்டை அஜித் கட்டவுட்டுக்கு ஊற்றி ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற அஜித் ரசிகர்கள் கலையரங்கம் தியேட்டர் முன்பாக வைக்கப்பட்டுள்ள பேனரில் அஜித் ரசிகர்கள் சிலர் பீர் பாட்டிலுடன் அவருடைய திருவுருவ படத்திற்கு அபிஷேகம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அடுத்து கரூர் நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். கரூரில் வலிமை திரைப்படத்தில் நடைபெற்ற பால் அபிஷேகம் அபிஷேகம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் இருந்தாலும் அவர்கள் சென்ற சிலர் பால் மற்றும் பால் அபிஷேகத்தை பார்த்து முகம் சுளிக்க வைத்தது.




 



ரசிகர்கள் தங்கள் தலைவருக்காக வித்தியாசமான முறையில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துவரும் நிலையில், நல்ல படங்களை தந்துள்ள அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம், பீர் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளால் நல்ல நடிகருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகும் என தெரிவித்துள்ளனர். தங்கள் தலைவரின் (நடிகர்) புதிய படத்தை வரவேற்க பல்வேறு சேவை செய்தல் மூலம் அவர் புகழை வெளி உலகத்துக்கு தெரிவிக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.