உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. இதன்காரணமாக பல பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எனினும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யும் முறையை அளித்திருந்தனர். இதன்காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்து வருகின்றனர். 


இந்நிலையில் இந்த வேர்க் ஃப்ரம் ஹோம் தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவுனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “என்னைப் பொறுத்தவரை வொர்க் ஃபரம் ஹோம் என்பது எப்போதும் பிடிக்காத ஒன்று. இதனால் நிறுவனத்தின் சிரதன்மை விரைவாக சிதைவு அடைந்துவிடும். ஏனென்றால் அனைவரும் வீட்டில் வேலை பார்ப்பதால் கடின உழைப்பு, ஊழியர்களுக்கு இடையே இருக்கும் உறவு, உரையாடல் ஆகியவை முற்றிலும் தடைப்பட்டு வருகிறது. 




குறிப்பாக இந்தியா மாதிரியான நாடுகளில் இந்த முறை எப்போதும் சரியாக இருக்காது. இங்கு ஒவ்வொரு இடங்களில் இணையதள சேவையின் வேகமாக சரியாக இல்லை. மேலும் பலருக்கு தங்களுடைய வீடுகளில் அலுவலகம் போல் வேலை செய்யும் வசதியும் இல்லை. ஆன்லைன் கல்வி குழந்தைகளின் மீது எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோல் தான் இளைஞர்கள் மீது இந்த வொர்க் ஃபர்ம் ஹோம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் தங்களுடை வேலையில் எந்தவித புதிய விஷயங்களை கற்று கொள்ளாமல் இருந்து வருகின்றனர். 


இந்தியா அடுத்து பொருளாதார வளர்ச்சியில் சீனாவை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றால் அதற்கும் இந்த முறை சரியாக இருக்காது. 1940ஆம் ஆண்டு ஜெர்மனி மக்கள் வாரத்தின் 6 நாட்களும் 16 மணி நேரம் வேலை செய்து பொருளாதார சக்தியாக வளர்ந்தனர். அந்தவகையில்  நாம் பணி செய்தால் மட்டுமே சீனாவின் பொருளாதார வளர்ச்சியை நம்மால் எட்டி பிடிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்து தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் இதற்கு ஆதரவாகும், மற்ற சிலர் வீட்டிலேயே பணி செய்வதை தொடர வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.




மேலும் படிக்க:நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் செலவிடும் 2K கிட்ஸ்.. நாடு முழுவதும் அதிகரிக்கும் இணைய டேட்டா பயன்பாடு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண