ரோபாட்டிக்ஸ் மற்றும் பொறியியலின் ஈர்க்கக்கூடிய செயல்பாடுகளில் ஒன்றாக, இரண்டு கால் ரோபோ ஒன்று 100 மீட்டர் வேகத்தில் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. காஸ்ஸி என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, OSU இன் வைட் ட்ராக் அண்ட் ஃபீல்ட் சென்டரில் 24.73 வினாடிகளில் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்தது. நின்ற நிலையில் இருந்து தொடங்கி, ஸ்பிரிண்டிற்குப் பிறகு, எந்த வீழ்ச்சியும் இல்லாமல் அடுத்த நிலைக்குத் திரும்பியது. அறிக்கையின்படி, இந்த ரோபோ கேஸ்ஸி பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது மற்றும் OSU ஸ்பின்ஆஃப் நிறுவனமான அஜிலிட்டி ரோபாட்டிக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டது.
ரோபோவின் முழங்கால்கள் நெருப்புக்கோழி போல வளைந்து, கேமராக்கள் அல்லது வெளிப்புற சென்சார்கள் இல்லாமல் இயங்குகிறது, முக்கியமாக கண் தெரியாதவர்கள் போல இதன் இயக்கம் உள்ளது. 2021 ஆம் ஆண்டில் 5-கிலோமீட்டர் (3.1-மைல்) பாதையை 53 நிமிடங்களுக்குள் கேஸ்ஸி ஓடி சாதனை செய்தது.வெளிப்புற நிலப்பரப்பில் இயங்கும் நடையைக் கட்டுப்படுத்த மெஷின் லெர்னிங்கைப்பயன்படுத்தும் முதல் இரண்டு கால் ரோபோ காஸ்ஸி என்று மேம்பாட்டுக் குழு கூறியது.
கின்னஸ் முயற்சிக்கு தலைமை தாங்கிய பட்டதாரி மாணவர் டெவின் குரோலி கூறுகையில், "கடந்த பல ஆண்டுகளாக இந்த உலக சாதனையை அடைவதற்கான புரிதலை நாங்கள் உருவாக்கி வருகிறோம், 5k ஓட்டம் மற்றும் படிக்கட்டுகளில் இந்த ரோபோ கால்களை ஏற்றி இறக்கினோம்.
"மெஷின் லெர்னிங் அணுகுமுறைகள் படங்களைக் கண்டு உணர்வது போன்ற வடிவ அங்கீகாரத்திற்காக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் இதைக்கொண்டு ரோபோக்களுக்கான கட்டுப்பாட்டு நடத்தைகளை உருவாக்குவது புதியது மற்றும் வேறுபட்டது." என்று கூறியுள்ளார்.