UPI Payment: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து யுபிஐ  பேமெண்ட் தளங்களிலும் பயனர்கள் தங்களது குரல் மூலமாக பணப் பரிவர்த்தனை  மேற்கொள்ளும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்ததப்பட உள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது. 


யுபிஐ பரிபவர்த்தனை:


பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையளாக் கூடிய வசதி தான் UPI (Unified Payments Interface)  என கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆணடு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையை தொடங்கியது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, ஜிபே, பேடிஎம், போன் பே போன்ற பல்வேறு செயலிகள் மூலம், டீ-க்கடை தொடங்கி நகைக்கடை வரையிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது.


பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றிற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.  டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. 


புதிய அம்சங்கள்: 



  • AI தொழில்நுட்பம்


 ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் (artificial intelligence system) அதாவது ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  உரையாடல் மூலம் (natural language conversations) பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி இதனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது 'Conversational Payments' என்று சொல்லப்படுகிறது. குரல் வழி பயன்பாடு பயனர்களுக்கு மிகுந்த எளிதாக இருப்பதால்  அறிமுகமாக உள்ளது.


முதற்கட்டமாக இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக பிராந்திய மொழிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், பயனர்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதன் மூலம் இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். இதனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.



  • இனி 500 ரூபாய்:


யுபிஐ லைட் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையும் 200 ரூபாய்க்கு கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்து கொள்ள முடியும்படி இருந்தது. இந்நிலையில், 200 ரூபாய்க்கு கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்து கொள்ளும் அளவீட்டை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த அளவீட்டை தற்போது ரூ.500 ஆக உயர்த்த இருப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. எனவே, யுபிஐ லைட் சேவை மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையும்  500 ரூபாய்க்கு கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேபெண்ட் செய்து கொள்ள முடியும்.



  • ஆப்லைன் பணப்பரிமாற்றம்:


யுபிஐ ஆப்லைன் பேபெண்ட முறைகளில் பிரபலமான என்எப்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட உள்ளது. இது Near Field Tech எனப்படும் NFC பயன்படுத்தி ஆப்லைன் மூலம் யுபிஐ பேமெண்ட் சேவைக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் போன், ஸ்மார்ட் வாட்சி ஆகியவற்றின் மூலம் பேமெண்ட் செய்து முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.