உலகில்  2 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முன்னணி மெசஞ்ர் நிறுவனம் வாட்ஸ் அப். தற்போது வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு பல புதிய வசதிகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஏற்கனவே சில வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சில வசதிகள் சோதனை முயற்சியில் இருக்கின்றன. அந்த வகையில் இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள புதிய வசதி குறித்து பார்க்கலாம். .



நீக்கப்பட்ட செய்திகளை மீண்டும் பெறலாம் .


வாட்ஸ்அப் நிறுவனம்  கடந்த 2018 ஆம் ஆண்டு  "delete for me” ,  "delete for all"  என இரண்டு வசதிகளை அறிமுகப்படுத்தியது. இது பயனாளர்களால் அனுப்பப்பட்ட தவறுதலான குறுஞ்செய்திகளை அழிக்க இந்த வசதி பெறும் உதவியாக இருந்து. பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 7 நிமிடங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்ட செய்திகளை மட்டுமே அழிக்க முடியும் என இருந்த நிலை மாறி , தற்போது 2 நாட்கள்  பழைய செய்திகளை கூட அழிக்கலாம் என  கூடுதல் அவகாசத்தை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீண்டும் பெறுவதற்கான undo வசதியை வாட்ஸ் அப் தற்போது தனது பீட்டா பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல WABetaInfo அறிக்கையின் படி , undo வசதியை  "delete for me”  என்னும் வசதிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதனை கீழ்க்கண்ட புகைப்படம் தெளிவாக விளக்கும். இந்த வசதி இன்னும் சில வாரங்களில் அனைத்து பயனாளர்களின் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




குரூப்பில் உள்ள எண்ணை மறைக்கலாம் :


வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் இருந்தால் அந்த குரூப்பில் இருக்கும் யாராக இருந்தாலும் உங்கள் போன் நம்பரை தற்போது எடுத்துக்கொள்ள முடியும். தற்போது பலரும் குரூப்பில் இருந்து உங்கள் நம்பரை எடுத்தேன் எனக் கூறி வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வார்கள். அந்த அனுபவம்  உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இந்த பிரச்னைக்கு தற்போது முடிவுகட்டவுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். அதற்கான அப்டேட்டை விரைவில் கொண்டுவரவுள்ளது. அதாவது வாட்ஸ் அப் குரூப்பில் இருந்தாலும் உங்கள் மொபைல் எண்ணை மறைத்துவைக்கும் ஆப்ஷனை விரைவில் அறிமுகம்செய்யவுள்ளது வாட்ஸ் அப்.தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில் சோதனை அடிப்படையில் இந்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆண்ட்ராய்டுக்கு மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. இந்த ஆப்ஷனுக்கு வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்து அனைத்து பயனர்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படும் என வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது