கடந்த மாதம் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழு உறுப்பினராக இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாக போர்டு உறுப்பினர் குழுவின் இணைய மறுத்த எலான், இன்று ட்விட்டரை விலைக்கு வாங்கிவிட்டார். ஆம், வெகு நாட்களாக, ட்விட்டர் நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்ச்சித்து வந்தார் எலான் மஸ்க். ட்விட்டருக்கும் சரியான ஒரு தலைமை இல்லாததால், நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போனது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டருக்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் ட்விட்டரை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் போட்டிப் போட்டுகொண்டு வந்தன. ஆனால், இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிவிட்டார். ட்விட்டரில் கருத்துச் சுதந்திரம் இல்லை எனச் சொல்லி வந்த எலான் மஸ்க் தற்போது ட்விட்டரில் பல்வேறு புதுவித மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டும் என்று தனது ட்வீட் மூலம் மக்களிடம் கருத்துக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






தற்போது, 'சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகம் செயல்படுவதற்கான அடிப்படையான ஒன்று. டிவிட்டர் என்பது ஒரு டிஜிட்டல் ஸ்பேஸ், மனிதர்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டிய ஒன்று. ட்விட்டரில் பல புதிய மாற்றங்களை கொண்டுவரவே அதை வாங்கினேன். ட்விட்டர் அசாதாரணமான ஒன்று. நிறுவனத்துடனும் புதிய அப்டேட்களை மேற்கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த புதிய சிறப்புகள் ட்விட்டர் பயன்களுக்கு கிடைக்க ஒன்றிணைந்து செயல்படுதை எதிர்நோக்கி  இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.


ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதன் மகிழ்ச்சியை பலரும் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
























 
































மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண