தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் . வாரிசு நடிகராக இருந்தாலும் , விஜய் தனது உழைப்பால் முன்னேறியவர் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆரம்ப காலத்தில் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திர சேகர் விஜய்க்கு அடித்தளம் போட்டுக்கொடுத்தாலும் , தளபதி என்னும் மாஸ் கட்டிடத்தை தானே உருவாக்கியவர் விஜய். இந்நிலையில் விஜய்யின் ஆரம்பகால திரைப்பட தயாரிப்பாளரான , அபிராமி ராமநாதன் அவரது நடிப்பு , மாஸ் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறியதாவது :
"விஜய்யை பொருத்தவரையில் நான் பார்த்து வளர்ந்தவன். அந்த பையனின் முதல் ஐந்து படங்களை நான்தான் ஓட்டி என்கரேஜ் பண்ணேன். அவனுக்கு உழைப்பு மேல நம்பிக்கை இருக்கு. உழைப்பினால் வரும் செல்வமே நற்செல்வம்னு நினைக்க கூடிய பையன். அதுமட்டுமல்லாமல் அவனிடம் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆருக்கு எப்படி ஒரு மாஸ் இருந்ததோ . அதே போல இவனுக்கும் ஒரு மாஸ் இருக்கு. தன்னை அறியாமல் வந்து பார்க்குறாங்க. படம் நல்லா இல்லாவிட்டாலும் நல்லா இருக்குனு சொல்லுறாங்க. அந்த பையனுக்கு ஒரு ராசி இருக்கு, எம்.ஜி.ஆருக்கும் எல்லா பாடலும் ஹிட் ஆகும். அது போல விஜய்க்கும் எல்லா பாடலும் ஹிட் ஆகிடுது. ஆஸ்கருக்கு போகக்கூடிய அளவு விஜய்க்கு திறமை இருக்கு. ஆஸ்கர் விருது கொடுப்பதில் ஒரு சிக்கல் இருக்கு. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படங்களை தவிர, வெளிநாட்டு படங்களில் ஒரே ஒரு படத்திற்கு மட்டும்தான் அந்த விருது கிடைக்கும். ஆஸ்கர் விஜய்க்கு கிடைத்தால் தமிழுக்கு பெருமைதானே. இப்போ அவருக்கு மார்கெட் நல்லா இருக்கிறதால அரசியலில் இப்போ இறங்குவாரா இல்லை இன்னும் 10 வருடங்கள் கழித்து இறங்குவாரானு தெரியலை . அது மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால் விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.