பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒன்று ட்விட்டர். பேஸ்புக்கும், இன்ஸ்டாவும் பொழுதுபோக்கு என்று வைத்துக்கொண்டால் ட்விட்டர் சற்று வித்தியாசமானது. அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், உலக நாடுகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ட்விட்டரை தகவல் பரிமாற்றத்தின் முக்கிய கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். சினிமா ரிலீஸ் முதல் ஒரு நாட்டின் தேர்தல் வரை பல விஷயங்களிலும் ட்விட்டரின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அதனால்தான் உலகநாடுகளின் அரசுகளும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை உற்றுநோக்கி தங்கள் நாடுகளுக்கான விதிமுறைக்குள் கொண்டு வரப்பார்க்கின்றனர். இந்நிலையில் தங்களது பயனர்களுக்கு ஏற்ப ட்விட்டரும் அடிக்கடி பல அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புது அப்டேட்டை கொண்டு வரவுள்ளது ட்விட்டர்.
ட்வீட்டை எண்ணலாம்..
ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் அந்த குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை ட்வீட்டை பதிவிட்டுள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளும் விதத்தில் புதிய அப்டேட்டை கொண்டுவரவுள்ளது. சிலருக்கு இந்த அப்டேட் வந்துள்ளதாகவும் சிலருக்கு விரைவில் வரும் எனவும் தெரிகிறது. இதன் மூலம் பயனர்கள் எந்த அளவுக்கு ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கிறார்கள் என்பதை அவரவர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளலாம் என ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டர் தரவுகளின்படி, ட்விட்டர் பயனர்களை பொறுத்தவரை 10சதவீத பயனர்கள்தான் 80சதவீத ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். மற்ற பயனர்கள் அவ்வப்போது மட்டுமே ட்வீட் செய்கின்றனர். ஒரு சராசரி ட்விட்டர்வாசி மாதத்துக்கு 2 ட்வீட்களை மட்டுமே பதிவிடுகின்றனர்.
இதற்கிடையே பாலிசியை மீறியதாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளை தடை செய்து வருகிறது அந்நிறுவனம். மைக்ரோ பிளாக்கிங் தளம் மே 26 முதல் ஜூன் 25 வரை லோக்கல் கிரிவன்ஸ் மெக்கானிசம் மூலமே பெறப்பட்ட 724 புகார்களில் இதுவரையில் 122 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மே மாதத்தில் மட்டும் 46,000 க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்துள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் 4(d) விதிகளின் படி ட்விட்டர் நாட்டில் உள்ள பயனாளர்களின் புகார்கள் மற்றும் அதை கையாள்வது தொடர்பான மாதாந்திர அறிக்கையை அவசியம் வெளியிட வேண்டும். அனைவரும் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தவும், அதே வேளையில் துன்புறுத்தும், அச்சுறுத்தும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் என்றுமே அனுமதிக்காது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்