கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் ட்விட்டர் சமூக வலைதள கணக்கை லாக்கிங் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ட்விட்டர் பயனாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 


கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் ட்விட்டர் கணக்கை லாக்கிங் செய்யும்போது பயனாளர்களுக்கு Error என்ற தகவல் வருகிறது. 


எலான் மஸ்க்கும் ட்விட்டரும்:















ட்விட்டரில் அதிக அளவிலான பங்குகளை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) வாங்கிய பிறகு நிர்வாக ரீதியாகவும், ட்விட்டர் செயலியின் தொழில்துட்பம் ஆகியவற்றில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டர் தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ட்விட்டரில் போலியான பயனர்களை கண்டறியும் வகையில் வெரிஃபிகேசன் முறையிலும் மாற்றங்களை செய்ய திட்டம் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு  மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.














மேலும் பிரபலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு 'official' எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும், போலி கணக்குகளுக்கு 'parody' எனும் பேட்ச் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


ட்விட்டரில் கொண்டுவரப்பட்டுள்ள சமீபத்திய அப்டேட்கள்:


ட்விட்டர் வார்த்தைகள் எண்ணிக்கை:


ட்விட்டர் பயனர் ஒருவர் எலான், ட்விட்டரில் 280 வார்த்தைகளில் இருந்து 4 ஆயிரம் வார்த்தைகளாக உயர்த்தப்படுவது உண்மையா? என்று கேள்வி அனுப்பியுள்ளார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டரில் ‘ஆம்’ என்று பதிலளித்துள்ளார். 


இனி பல நிறங்களில் ட்விட்டர் வெரிஃபிகேசன் டிக்:


ட்விட்டரில் போலியான அக்கவுண்ட்கள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு, ப்ளூ டிக் மட்டுமின்றி தனிநபர் மற்றும் நிறுவனங்களை தனியே அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் வெவ்வேறு வண்ணங்களால் ஆன வெரிஃபிக்கேசன் டிக் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், இந்தியாவில் இன்று காலை முதல் பல்வேறு நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் ட்விட்டர் லாக்கிங் செய்வது பிரச்சனையாக இருந்து வந்தது. இதேபோல், நேற்று மாலை முதல் அமெரிக்காவில் உள்ள பயனர்களும் ட்விட்டரில் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளனர். 


பிரச்சனை:


இந்தியாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப பாதிப்பு தற்போது சரியான போதிலும், பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் எலன் மஸ்க், இந்த சிறிய லாக்கிங் பிரிவை தொழில்நுட்ப கோளாறை கண்டுகொள்ளாதது ஏன்? என ட்விட்டர்வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


கம்ப்யூட்டரில் ட்விட்டர் சமூக வலைதள கணக்கை லாக்கிங் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் சீரமைக்கப்பட்டது. தற்போது Error என வந்தது சரி செய்யப்பட்டதாக ட்விட்டர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.