ட்விட்டர் பக்கத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் போலி கணக்குகள் குறித்த தகவல்களை திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது.
ட்விட்டர் பயன்படுத்தும் பயனாளர்களில் 5 சதவீதத்திற்கு குறைவானோர் போலி கணக்குகள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, உலகின் நம்பர் 1 தொழிலதிபரான எலான் மஸ்க் இந்திய மதிப்பில் 3.34 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடக நிறுவனத்தின் பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 20% பங்குகள் சரிந்தன. இதுகுறித்து தகவல் குறித்து ட்விட்டர் நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை. இந்த மாத தொடக்கத்தில், தவறான அல்லது ஸ்பேம் கணக்குகள் முதல் காலாண்டில் ட்விட்டரில் உள்ள பயனர்களில் 5% க்கும் குறைவாகவே இருப்பதாக நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
மஸ்க் உடனான ஒப்பந்தம் முடிவடையும் வரை, விளம்பரதாரர்கள் தொடர்ந்து ட்விட்டரில் செலவிடுவார்களா என்பது உட்பட பல அபாயங்களை எதிர்கொண்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் வன்முறையை தூண்டும் வகையில் ட்ரெம்பின் பதிவுகள் இருந்ததாக கூறி அவருடைய கணக்கு முடக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் தனக்கு ட்விட்டரில் மீண்டும் சேரும் எண்ணமில்லை என்று கூறினார். அவர் தன்னுடைய ட்ரூத் சோஷியல் என்ற பக்கத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே ட்விட்டர் பக்கத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாக அனைவருக்கும் தங்களுடைய கருத்துகளை சொல்ல உரிமை உண்டு என்று கூறி இந்த தடையை நீக்குவார் என்று கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சற்று சரிந்துள்ளன. நேற்று மட்டும் பங்குசந்தையில் ட்விட்டர் பங்குகளின் விலை சுமார் 1.5% குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளின் விலை சற்று குறையும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்