ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இச்செய்தியை உறுதிப்படுத்தி ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார் ஜேட் டோர்சி.


டோர்சி கடந்த 2015ஆம் ஆண்டு ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 45 வயதான டோர்சி, ட்விட்டர் மற்றும் அவரது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் ஆகிய இரண்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். 






தனது ட்விட்டர் பதிவில், “யாருக்காவது தெரியுமா என தெரியவில்லை. ட்விட்டரில் இருந்து நான் விலகிவிட்டேன்” என்ற கேப்ஷனோடு ஒரு கடிதத்தை பகிர்ந்திருக்கிறார்.


அதில், “கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ட்விட்டரில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நான், விடை பெறுவதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். நான் விடைபெறுவதற்கான காரணங்களாக மூன்று முக்கிய காரணங்களை முன் வைக்கின்றேன். முதலாவதாக, பரக் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு சரியான தேர்வு என்பதை உணர்ந்தேன். 


இரண்டாவது, நம் குழுவின் தலைமை பொறுப்பை பிரெட் டெய்லர் ஏற்றுக்கொள்வதும் சரியான முடிவு. மூன்றாவது, ட்விட்டர் குழுவாகிய நீங்கள் எல்லோரும்தான். இன்று முதல் பரக் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள இருக்கிறார். அவர் சிறப்பாக பணியாற்றுவார் என நம்புகிறேன்” என ஒரு நீண்ட கடிதத்தை எழுதி இருக்கிறார். '











மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க:


parag Agrawal Twitter CEO: ட்விட்டரை ஆளப்போகும் இந்தியன்.. யார் இந்த பரக் அக்ராவல்?