Twitter Verification: டிவிட்டரில் ஏற்கனவே உள்ள புளூ டிக்குடன் புதிதாக கோல்டன் டிக் மற்றும் கிரே டிக் அம்சத்தினை எலன் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். 


இது குறித்து ஏற்கனவே கடந்த மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் எலன் மஸ்க் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இதன்படி, தற்போது டிவிட்டரில் புதிதாக ஒரு அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஏற்கனவே உள்ள புளூ டிக்குடன், தற்போது, கோல்டன் டிக் மற்றும் கிரே டிக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே உள்ள புளூ டிக் தனி நபர்களின் கணக்குகளை குறிக்கும் எனவும், புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கோல்டன் டிக் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கணக்குகளை குறிக்கும் எனவும், கிரே டிக் அரசாங்க கணக்குகளை குறிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே டிவிட்டரில் உள்ள கணக்குகள் கண்காணிக்கப்பட்டு, அவற்றில் போலியான கணக்குகளை டிவிட்டர் நிர்வாகமே நீக்கும் பணியைச் செய்து கொண்டுள்ளது. இதில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சத்தின்படி, கணக்குகளை மிக எளிதாக அடையாளம் காணமுடியும். மேலும், இந்த அம்சம் தற்போதுதான்  அறிமுகபடுத்தப்பட்டிருப்பதால், இன்னும் பரவாலாக அனைத்து கணக்குகளும் வகைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. 


எலன் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பிறகு, புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. 


புளூ டிக் (தனி நபர்களுக்கு)






கோல்டன் டிக் (நிறுவனங்களுக்கு)