இந்தியாவில் அதிக நபர்கள் பயன்படுத்தும் சமூகவலைதளங்களில் ஒன்று. இந்த தளத்தில் வெரிஃபைட் கணக்குகள் என்று சில கணக்குகள் உள்ளன. அந்த கணக்குகளை வெரிஃபைட் கணக்காக மாற்ற ட்விட்டர் சில நடைமுறைகளை வைத்துள்ளது. இதனால் வெரிஃபைட் கணக்குகளில் இருந்து வரும் பதிவுகள் மற்றும் தகவல்களை பெரும்பாலனவர்கள் நம்புவது வழக்கம். 

Continues below advertisement

 

இந்நிலையில் அந்த வழக்கத்தை பயன்படுத்தி தற்போது ஒரு புதிய வகையில் போலி செய்தியை அனுப்பி சிலருடைய கணக்கு ஹேக் செய்து வருகின்றனர். அதாவது ஒரு வெரிஃபைட் ட்விட்டர் கணக்கில் இருந்து சிலருக்கு உங்களுடைய ட்வீட்களில் காப்புரிமை மீறல் நடந்துள்ளது. அதற்கு இந்த கூகுள் ஃபார்மில் உங்களுடைய கணக்கை வெரிஃபை செய்யுங்கள் என்று வந்துள்ளது. 

Continues below advertisement

 

அதை க்ளிக் செய்து உங்களுடைய கணக்கின் பாஸ்வேர்டை அடித்தவுடன் அவர்களுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்படுகிறது. அதாவது அவர்களுடைய கணக்கை மீண்டும் அவர்களால் நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று இருந்து இன்று வரை பல்வேறு நபர்களின் ட்விட்டர் கணக்கு இதுபோன்று முடக்கப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அதில்,”என்னுடைய நண்பர் ஒருவருக்கு வெரிஃபைட் கணக்கில் இருந்து ட்விட்டர் சப்போர்ட் போல் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை பின்தொடர்ந்து கிளிக் செய்து தன்னுடைய கணக்கு விவரங்களை போட்டதால் அவரின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

 

மேலும் அந்த நபர்களுக்கு வரும் கணக்கு ஒரு பிரபல பத்திரிகையாளரின் கணக்கில் இருந்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது வட இந்தியாவில் செயல்பட்டு வரும் லைவ் லா என்ற நீதிமன்றம் தொடர்பாக செய்திகளை செய்து வரும் தளத்தின் பத்திரிகையாளர் ஒருவரின் கணக்கு தான் அது என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக லைவ் லா நிறுவனம் ஒரு ட்வீட்டையும் செய்துள்ளது. இந்த போலி செய்தி இனிமேல் வந்தால் யாரும் க்ளிக் செய்து தங்களுடைய விவரங்களை கொடுக்க வேண்டாம் என்று பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

 

மேலும் படிக்க: வீட்டில் ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி? 2021ல் இந்தியர்கள் கூகுளில் தேடிய டாப் 10 செர்ச் பட்டியல்!