சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள கண்ணந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல், இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் ரூ. 88 ஆயிரம் மதிப்பிலான எல்ஜி 32 இன்ச் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி உள்ளார். அதனை 27 ஆம் தேதி எல்ஜி நிறுவனத்தின் ஊழியர் மதியழகன் என்பவர் வடிவேல் வீட்டில் தொலைக்காட்சியை பொருத்துவதற்காக வந்துள்ளார். அட்டையை பிரித்து தொலைக்காட்சியை வடிவேல் வீட்டில் பொருத்திய மதியழகன் தொலைக்காட்சி பொழுது ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார். 



இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் சம்பந்தப்பட்ட கடையில் சென்று புதிய தொலைக்காட்சிப் பெட்டி கலங்கு வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கடை ஊழியர்கள் தொலைக்காட்சி பெட்டியின் நிறுவனத்தில் முறையிட்டால் புதிய டிவி வழங்குவார்கள் என்று கூறியுள்ளனர்.


அதனையடுத்து சேலத்தில் உள்ள எல்ஜி நிறுவனத்தில் புகார் அளித்துள்ளார் வடிவேல். அதற்கு எல்ஜி நிறுவனம் தரப்பிலிருந்து முறையான பதில் அளிக்கப்படாததால் மூன்று மாதத்திற்கு பிறகு சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். இந்த வழக்கு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு புதிய டிவி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


அதற்கும் எல் ஜி நிறுவனத்தில் இருந்து எந்த வித பதிலும் இல்லாததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் ஆஜராக வேண்டும் மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து எந்த வித பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்தார் நீதிபதி எல்ஜி நிறுவனம் வடிவேலு தொலைக்காட்சி பெட்டிக்கு செலுத்தப்பட்ட ரூ. 88 ஆயிரம் மற்றும் அபராதமாக ரூ. 50 ஆயிரம் மற்றும் இதற்கான ஆண்டு வட்டியாக ஆறு சதவீதம் வடிவேலுக்கு கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 



இதுகுறித்து வடிவேலு கூறுகையில், டிவி வாங்கிய நாளன்றே பழுது ஆகியதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று முறையிட்டேன். நிறுவனத்திலிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் மூன்று மாதத்திற்குப் பிறகு சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தேன். நீதிமன்றத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு செலுத்தப்பட்ட தொகை ரூ. 88 ஆயிரம் மற்றும் அபராதமாக ரூ. 50 ஆயிரம் மற்றும் இதற்கான ஆண்டு வட்டியாக 6% வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே மக்கள் அனைவரும் வாங்கும் பொருளுக்கு முறையாக வட்டி செலுத்தி ரசிதியுடன் வாங்கினாள் பொருள் பழுதாகி நிலையில் இருந்தாள் உடனடியாக நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டு இழப்பீடு தொகை முறையாக கிடைக்கும் என்று கூறினார்.