கொரோனா பெருந்தொற்று காரணமாக தியேட்டர்கள் நீண்ட நாட்களாக செயல்படவில்லை. இந்தச் சூழலில் மக்கள் அனைவரும் ஓடிடி தளங்களில் அதிக திரைப்படங்கள் மற்றும் வேப்சீரிஸ் பார்த்து வருகின்றனர். இவற்றை நமக்கு தியேட்டர் அனுபவத்துடன் பார்க்க நமக்கு ஹோம்தியேட்டர்கள் மிகவும் முக்கியமான கருவியாக மாறியுள்ளது. ஊரடங்கு காலத்தில் தற்போது ஹோம்தியேட்டர் வாங்க முடியாத சூழல் இருந்தாலும் இதற்கு பின் ஹோம்தியேட்டர்களுக்கு மவுசு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் தற்போது சந்தையில் உள்ள டாப்-5 ஹோம் தியேட்டர்கள் எவை?


5. யமஹா ஒய்ஹெச்டி 3072-இன் 5.1 சிஸ்டம்:




இந்த யமஹா சவுண்ட் சிஸ்டம் சிறப்பான தரமான ஆடியோவை தரும் வகையில் உள்ளது. இது 4 கே ஆடியோவை தரும் திறன் கொண்டது. மேலும் இது ஹெச்டி தரம் வாய்ந்த வீடியோக்களில் உள்ள ஆடியோவை சிறப்பாக தரும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் இதில் உள்ள சினிமா டிஎஸ்பி தொழில்நுட்பம் டால்பி டிஜிட்டல் சவுண்ட் தரும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த சவுண்ட் சிஸ்டத்தில் ஒரே ஒரு மைன்ஸ் அதன் சப் ஊஃபர் ஸ்பிக்கர்கள் சற்று சிறியதாக உள்ளது. 


பிலிப்ஸ் ஆடியோ எம்எம்எஸ்2பி மல்டிமீடியா ஸ்பிக்கர்:




பிலிப்ஸ் நிறுவனத்தின் சிறப்பான தயாரிப்புகளில் ஒன்று இந்த ஸ்பிக்கர். இது சவுண்ட் பார் போன்று பயன்படுத்தும் வசதியை கொண்டுள்ளது. மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் இந்த ஸ்பிக்கர் கொடுக்கும் பணத்திற்கு நல்ல பயனை தரும் வகையில் இருக்கிறது. மேலும் இதில் யுஎஸ்பி முறை பொருத்தும் முறை சிறப்பாக இருப்பதால், இதை எளிதாக பயன்படுத்த முடியும். மேலும் இதில் புளூடூத் முறையில் தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது. அமேசான் தளத்தில் இதன் விலை 12,589 ரூபாய் ஆக இருக்கிறது. 


சோனி ஹெச்டி ஆர்டி3 ஹோம்தியேட்டர் கம் சவுண்ட் பார்:




சந்தையில் சோனி பொருட்களுக்கு தனியாக வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது இந்த சவுண்ட் சிஸ்டம். 4கே ஹெச்டி சவுண்ட் தரும் மற்ற சோனி சவுண்ட் சிஸ்டத்தைவிட இது சற்று விலை குறைவு என்பதால் அதிகம் பேர் வாங்கும் அளவில் இது இருக்கிறது. மேலும் இந்த 5.1 சவுண்ட் பார் சிஸ்டம் இயல்பாக பயன்படுத்தப்படும் மின்சாரத்தைவிட மிகவும் குறைவான அளவே பயன்படுத்துகிறது. இது வெறும் 600 வாட் பவரை பயன்படுத்துகிறது. கிளியர் ஆடியோ தொழில்நுட்பம், என்எஃப்சி மற்றும் புளூடூத் வசதி சிறப்பாக செயல்படுகிறது. இதன் விலை 19,990 ரூபாய் ஆக உள்ளது. 


சோனி ஹெச்டி-ஐ300 டிடிஹெச் ஹோம்தியேட்டர் சிஸ்டம் :




இது வீட்டில் இருக்கும் டிடிஹெச் உடன் எளிதாக பொருந்தக்கூடிய சோனி சவுண்ட் சிஸ்டம் ஆகும். இதில் 5 ஸ்பிக்கர் மற்றும் ஒரு சப் ஊஃபர் ஸ்பிக்கர் அமைந்துள்ளது. டிடிஹெச் பாக்ஸிலிருந்து ஹெச்டிஎம்ஐ கேபில் மூலம் இதை பொருத்தி கொள்ள முடியும். இதனால் அனைத்து டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை ஹெச்டி தரத்தில் கேட்கும் வசதி கிடைக்கும். மேலும் மற்ற ஹோம் தியேட்டர்களை ஒப்பிடும் போது இதன் அளவு மிகவும் குறைவாக உள்ளது. 


சோனி ஹெச்டி-ஆர்டி40 5.1 டால்பி ஆடியோ சவுண்ட் பார் சிஸ்டம்:




இந்த சோனி சிஸ்டத்தில் இரண்டு சவுண்ட் பார், 2 ரியர் ஸ்பிக்கர் மற்றும் ஒரு சப் ஊஃபர் ஸ்பிக்கர் இடம்பெற்றுள்ளது. நீங்கள் அதிகளவில் பாடல்கள் கேட்டு மகிழ்பவர் என்றால் உங்களுக்கு இது மிகவும் சிறப்பான ஒன்றாக அமையும். இதில் சவுண்ட் குவாலிட்டி அவ்வளவு தரமாக இருக்கும். 5.1 டால்பி டிஜிட்டல் தரத்தில் வரும் சவுண்ட் சிஸ்டம் என்பதால் இது வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. என்எஃப்சி, புளூடூத், யுஎஸ்பி, ஆப்டிகல் கேபில் மற்றும் ஹெச்டிஎம்ஐ கேபில் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை தற்போது அமேசான் தளத்தில் 23,927 ரூபாய் ஆக உள்ளது. இதில் இருக்கும் ஒரே குறைப்பாடு என்னவென்றால் இது கேமிங் பயன்பாட்டிற்கு சரியான அனுபவத்தை தராது என்பது தான்.