Threads App: த்ரெட்ஸ் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதில் இருந்தே தங்களது மொபைல் பேட்டரி வழக்கத்துக்கு மாறாக குறைந்து வருவதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
த்ரெட்ஸ் ஆப்
ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப்-ஆன த்ரெட்ஸை ஜூலை 6 அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை தற்போது அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர். த்ரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே 10 மில்லியன் பயனர்களும் கணக்கு தொடங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது 100 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளனர். இந்த த்ரெட்ஸ் செயலியில் பயனர்களை கவரும் வகையில் பல அம்சங்கள் இருக்கிறது.
இது ட்விட்டர் போலவே டெக்ஸ்டை பிரதானமாக கொண்டு செயல்படும். 500 கேரக்டர்கள் வரையிலான குறுகிய பதிவுகள் அல்லது அப்டேட்களை வெளியிடலாம். மேலும், 5 நிமிடங்கள் வரை நீளமனா வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது லிங்க்குகளை த்ரெட்ஸ் ஆப்பில் பதிவிடலாம். இதற்கிடையில், த்ரெட்ஸில் பயன்படுத்தப்பட்டுள்ள நுணுக்கங்கள், டிவிட்டரில் இருந்து திருடப்பட்டவை என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றம்சாட்டி வருகிறார்.
இதனால், பெரும் பணக்காரர்களும், முக்கிய சமூக வலைதள நிறுவனங்களின் உரிமையாளர்களுமான மெட்டா குழும தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் எலான் மஸ்க் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
பயனர்கள் குற்றச்சாட்டு
த்ரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பயன்பாடு அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு பக்கம் வரவேற்பு இருக்கிறது. அதேநேரத்தில் த்ரெட்ஸ் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதில் இருந்தே தங்களது மொபைல் பேட்டரி குறைந்து வருவதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது த்ரெட்ஸ் செயலி அதிகமான பேட்டரிகளை உறிஞ்சுவதாக பயனர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பொதுவாக இது இணைப்பில் உள்ள இன்ஸ்டாகிராம் செயலி சுமார் 31 சதவீதம் மொபைல் பேட்டரியை உறிஞ்சும் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் கேமிரா பயன்படுத்துவதால் பேட்டரி குறைகிறது.
ஆனால், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட த்ரெட்ஸ் செயலியை பயன்படுத்துவதால் பேட்டரி வேகமாக குறைந்து வருவதாக சில பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மெட்டா நிறுவனம் தரப்பில் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க