ஆண்ட்ராய்டு போனை மிரட்டும் ஜோக்கர் வைரஸ் தொடர்ந்து அச்சமூட்டி வருகிறது. பல செயலிகளில் ஜோக்கர் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும் அடுத்தடுத்து பல செயலிகள் இந்த வைரசால் பாதிக்கப்படுவது கூகுளுக்கே பெரிய தலைவலியாக உள்ளது. ஜோக்கர் வைரஸ் ஊடுவிய செயலியை பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் , தகவல் திருட்டு நடப்பது ஒரு புறம் இருந்தாலும் , அவர்களின் மொபைல்போன்களையும் செயலிழக்க செய்யும் அபாயம் உள்ளது.
ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட 3 ஆண்ட்ராய்ட் ஆப்களை அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள். இந்த ஆப்கள் செல்போனில் இருந்தால் மால்வேர் தாக்கப்பட்டு உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாமென கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக போனில் உள்ள பண பரிவர்த்தனை செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உங்களது பணத்தை திருட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட 3 ஆப்கள் எவை?
Style Message, Blood Pressure App, Camera PDF Scanner ஆகிய 3 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளன.இந்த 3 மெசேஜ்களையும் இனி டவுன்லோடு செய்ய முடியாது என்றும், ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்திருந்தால் உடனடியாக பதிவுநீக்கம் செய்ய வேண்டுமென கூகுள் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜோக்கர் வைரஸ்..
ஜோக்கர் வைரஸ் முதல் முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன் பிறகு கூகுள் 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜோக்கர் வைரஸுடன் தங்கள் நிறுவனம் நீண்ட காலமாக போராடி வருவதாக குறிப்பிட்டிருந்தது. ஜோக்கர் வைரஸ் தாக்கிய நரின் மொபைலுக்கு வரும் SMS,அவரின் contact list, மொபைலின் device info, வங்கிகள் உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளின் OTP உள்ளிட்ட அனைத்தும் ஹேக்கர் கைக்கு சென்றுவிடும். இதனால் தான் ஜோக்கர் வைரஸை கண்டு கூகுளும், ஸ்மார்ட்போன் பயனாளர்களும் அலறுகின்றனர்.
முன்னதாக, 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்ட colour message என்ற செயலியும் ஜோக்கர் செயலியால் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த செயலியை கூகுள் நீக்கியது. ஏற்கெனவே டவுன்லோட் செய்த பயனாளர்கள் உடனடியாக அந்த செயலியை செல்போனில் இருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்