விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள பக்கம் மேடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்கின்ற இளைஞர் ஒரு யூனிட் மின்சாரத்தின் மூலம் 50 கிலோ மீட்டர் செல்லக்கூடிய மிதிவண்டி ஒன்றை வடிவமைத்துள்ளார். இதுகுறித்து பாஸ்கரிடம் கேட்டபொழுது நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன், நான் குழந்தையாக இருக்கும் பொழுது எனது தந்தை இறந்துவிட்டார், அம்மாவின் வளர்ப்பில் தான் நான் வளர்ந்து வந்தேன். என்னோட குடும்பத்தில் நான் தான் மூத்த பையன் எனக்கு பின்னால் தம்பி இரண்டு பேர் உள்ளதாக கூறினார். இவருடைய தாய் தையல் தொழில் தெரிந்ததால், அதில் வரும் வருமானத்தை கொண்டு எங்களைப் படித்து முன்னேற்றப் பாதைக்கு அனுப்பினார்.
2010ஆம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து முடித்தேன் அதன் பிறகு சில தனியார் கம்பெனிகளில் வேலை செய்தேன் கொரோனா காலகட்டம் காரணமாக வேலையிலிருந்து நீக்கியதாக கூறினார் பாஸ்கர். கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே சின்ன சின்ன ப்ராஜெக்ட் மற்றவர்களுக்கு செய்து கொடுத்துள்ளார். இவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பேட்டரி மூலம் இயக்க கூடிய மிதி வண்டியை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்திருக்கிறது இந்த நிலையில் தற்போது அதற்கான முயற்சியை மீண்டும் எடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் சைக்கிள் பேட்டரி செய்யும் பொழுது ஆசிட் பேட்டரி மற்றும் ஃபேன் மோட்டாரை சைக்கிளில் பொருத்தி இயக்கி பார்த்துள்ளார், பின்னர் பெரும் முயற்சிக்கு பிறகு ஒரு யூனிட் சார்ஜ் செய்தால், 50 கிலோமீட்டர் செல்லும் அளவிற்கு சைக்கிளை வடிவமைத்துள்ளார். லித்தியம் ஃபெரோ பாஸ் பஸ் இரும் என்ற 24 வோல்டேஜ் 18AH திறன் கொண்ட பேட்டரியை உருவாக்கி, சைக்கிளில் பொறுத்தியுள்ளார்.
அதேபோல், 250 வாட்ஸ் மற்றும் 24 வோல்ட் திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தியுள்ளதாகவும், இந்த பேட்டரி சைக்கிளை முழுமையாக செய்து முடிப்பதற்கு 20,000 ரூபாய் வரை செலவாகி உள்ளது என்றும் கூறுகிறார் பாஸ்கர். இதில் அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல முடியும் என்றும் மோட்டாரில் இயங்கும் போது அவ்வப்போது நாமும் பெடல் செய்தால் கூடுதலாக மைலேஜ் கிடைக்கும் என்பது இதனுடைய சிறப்பாக உள்ளது. தற்போது கியரில் இயங்கும் படி மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இதை விரைவில் முடித்து வெளியிடுவேன் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
தற்பொழுது தயாரித்துள்ள இந்த பேட்டரியை 2000 முறை வரை சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ஒரு முறை என்று பார்த்தால் கூட 5 வருடம் இந்த பேட்டரியை பயன்படுத்த முடியும் எனவும் யாராவது செய்து தரும்படி கேட்கும் பட்சத்தில் சில்டு அனைத்தும் பொருத்தி 25 ஆயிரம் ரூபாய்க்கு தர முடியும் என்கிறார் பாஸ்கர். மேலும் பாஸ்கரின் இந்த சைக்கிள் தயாரிக்க உதவிகிடைக்கும்பட்சத்தில், மாற்றுத்திறணாளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதை அவருடைய கனவாக வைத்துள்ளார்.