மக்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் புகார்களை பதிவு செய்ய உதவும் வகையில் வாட்ஸ்அப் சாட்போட் (whatsapp chatbot) அறிமுகப்படுத்த உள்ளதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.


மக்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் புகார்களை பதிவு செய்ய உதவும் வகையில் வாட்ஸ்அப் சாட்போட் (whatsapp chatbot) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான டெல்லி ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 1 ஆம் தேதி சாட்போட்டை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.


அதிகாரி ஒருவர், “மக்கள் மற்றும் கமிஷன் மிகவும் பயனுள்ள முறையில் தொடர்பு கொள்ள சாட்போட் உதவும். புகார் பதிவு, தகவலைத் தேடுதல் மற்றும் புகார் நிலையைக் கண்காணிப்பது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறும் என கூறினார். "குழந்தைகள், பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தகவல்தொடர்புகளுக்கு ஆணையத்தால் இந்த வசதி பயன்படுத்தப்படும்” என குறிப்பிட்டார்.    


chat bot என்பது மனிதரை போலவே வாடிக்கையாளருடன் பேசுவதற்க்கான கனினி மூலம் இயக்கப்படுகிறது. இதில் AI (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.


தற்போது சாட் பாட் செயலிகள் இகாமர்ஸ் (ecommerce), வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. நாம் உதவிக்காக பேசிடும் போது automatic reply வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதன் பதில் செயற்கையானதாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்கும்.


Chatbot தொழில்நுட்பத்தின் அடிப்படை natural language processing. தற்போது பயன்பாட்டில் இருக்கின்ற கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Apple’s SIRI), மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கார்டனா (Microsoft Cortana) ஆகியவற்றிலும் இந்த  தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்திற்கு ஏற்றார் போல chatbot இல் மாற்றங்கள் இருக்கும். அதன்படி பயனாளர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு automatic reply வரும். இந்த வசதி 24 மணி நேரமும் செயலில் இருக்கும். இதனால் மக்கள்  24 மணி நேரமும் தங்கள் புகார் அல்லது கேள்விகளை கேட்கலாம்.