டெஸ்லா என்ற பெயரை கேட்டாலே அது இந்தியாவுக்கு வருமா? வராதா? என்ற கேள்விதான் நம் மனதில் முதலில் எழும். இதில் தொடர் மர்மம் நீடித்து வருகிறது. ஆனால், அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக இது பற்றி தேட ஆரம்பித்தோம். 


டெஸ்லா, மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களை விடவும், மின்சார வாகனத்தின் முன்னோடியாக இருப்பதால், மோட்டார் வாகன துறையையே பெருமளவில் மாற்றியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்த துறையில் மற்ற நிறுவனங்கள் இறங்குவதற்கு முன்பே, முக்கிய மட்டத்தில் மின்சார வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டது.                                                                                                                                   


மின்சார வாகனத் துறையை மாற்றி அமைத்த டெஸ்லா:                                    


இன்று அனைவரும் அதையே பின்தொடர்கிறார்கள். டெஸ்லா, தங்கள் கார்களின் சார்ஜிங் நெட்வொர்க்கின் மூலம் மின்சார வாகனத் துறையை மாற்றி அமைத்தது. அதிக அளவில் பேசப்பட்ட கார் தயாரிப்பு நிறுவனம் என்றால், அது டெஸ்லாதான். அந்த நிறுவனத்தின் சிஇஓ பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், மிகவும் பிரபலமான, சொகுசு கார்களின் பிரிவில் தனக்கு என தனி பெயரை உருவாக்கிக் கொண்டு, தன்னை நிலைநிறுத்திக் கொண்டது எப்படி என்பதை பற்றிப் பார்ப்போம்.   



                                               


மாடல் 3 மற்றும் சைபர்ட்ரக் மீதான எதிர்பார்ப்பு எழுவதற்கு முன்பே, மாடல் எஸ் மற்றும் எக்ஸ் ஆகியவை வெற்றிகரமான மாடலாக உருவாகிவிட்டது. பெரிய வகை எஸ்யூவி காரான மாடல் எக்ஸ், சூப்பர்கார்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு வசதியை பெற்றுள்ளது. அற்புதமான கதவுகளை கொண்டுள்ளது. புகைப்படங்களாக எடுத்து சோர்வாகும் அளவுக்கு அம்சங்களை கொண்டுள்ளது. மற்ற எஸ்யூவி கார்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக உள்ளது மாடல் எக்ஸ். இந்தியாவை உள்ள கார்களை ஒப்பிடுகையில், நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது.


உதாரணமாக சொல்ல வேண்டுமானால், மாடல் எக்ஸ் கார்களில் உள்ள பால்கன் கதவுகள் தனித்துவமானவையாக இருக்கின்றன. நீங்கள் அவற்றைத் திறக்கும்போது உங்களை வியந்து பார்க்க வைக்கின்றன. அவசர காலத்தில் வெளியேறுவதற்கான ஜன்னல் அமைப்புடன் காருக்கு உள்ளே இருக்கும் இடம் பெரியதாக உள்ளது. 


காரை ஓட்டும்போது தரும் அனுபவம்:


நமக்கு பிடித்தமாற்றுக்கு அதன் வடிவமைப்பை மாற்றி கொள்ளலாம். இந்த 6-சீட்டர் பதிப்பு தனிப்பட்ட இருக்கைகளை கொண்டுள்ளது. மற்ற எஸ்யூவி கார்களில் இருப்பது போல தடியான இருக்கைகளை கொண்டிராமல் நல்ல இட வசதியுடன் இருக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற கார்களை விட அதிகமான இட வசதி கொண்டுள்ள இந்த காரில் மூன்றாவது வரிசை கூட விசாலமாக உள்ளது. 


காரின் மேல் பகுதியில், பனோரமிக் விண்ட்ஸ்கிரீனுடன் 17 இன்ச் ஸ்கிரீனுடன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. விண்ட்ஸ்கிருக்கு பழகுவதற்கு கொஞ்ச காலம் ஆகலாம். ஆனால், நீங்கள் நினைப்பது போல் சூரிய ஒளி ஒரு பிரச்னை அல்ல. மேயின் டச்ஸ்கிரீன், அனைத்தையும் உள்வாங்கி கொள்கிறது. டச்ஸ்கிரீன் பயன்படுத்த அழகாக இருக்கிறது. தரத்தை பொறுத்தவரையில், மிகவும் சிறந்ததாக உள்ளது.


லேட்டஸ்ட் பதிப்பில் தரப்பட்டுள்ள 22 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், இன்-கார் கேமிங், ட்ரை-ஜோன் காலநிலை கட்டுப்பாடு  என பல சொகுசு அம்சங்கள் இருக்கின்றன. உட்புறத்தின் வடிவமைப்பு எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது. இந்த காரை ஓட்டுவது வேற்றுகிரகவாசிகளின் விண்கலத்தை ஓட்டுவது போன்ற அனுபவத்தை தருகிறது. இந்த காரில் உள்ள அம்சங்களை மற்றவர்கள் காப்பி அடித்து வருகின்றனர். எந்த வித பட்டன்களும் இல்லாத உள்கட்டமை வடிவமைப்பும் காரை ஓட்டும்போது தரும் உற்சாக அனுபவமும் டெஸ்லாவின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கிறது. எந்த வித சிக்கலும் இன்றி காரை கச்சிதமாக ஸ்டார்ட் செய்யும் அனுபவம் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.       



                                                                                       


காரில் எந்த வித கியர் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இன்ஜின் சத்தமும் கேட்காது. ஏனெனில், அதன் உடனடி செயல்திறன் அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, உங்களை ஆச்சரியப்படுத்தலாம். எந்த வித பிரச்சனையும் இன்றி, ஆக்ஸிலரேஷன், சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகமாக செல்லும் இந்த பெரிய எஸ்யூவி கார், உங்களை பதற்றம் அடைய வைக்கலாம். சாலையில் உங்களின் காரின் டையர் உரசும்போது, ஒரு அற்புதமான உணர்வை பெறுவீர்கள். இரட்டை மோட்டர்களின் மூலம் அதன் சக்தி குறைக்கப்படுகிறது.


இந்த காரைவிட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ள பிளேட் வெர்ஷன் கார், 1000 பிரேக் ஹார்ஸ்பவருடன் இயங்குகிறது. சூப்பர் கார் வைத்திருக்கும் உங்களின் அண்டை வீட்டாரை சங்கடப்படுத்த விரும்பினால் தவிர, உங்களுக்கு அவ்வளவு வேகமாக இயங்கும் எஸ்யூவி கார்
தேவைப்படாது. காரில் இருந்து வெளிபுறத்தை பார்க்கும் கண்ணாடி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் எடை அதிகமாக இருந்தாலும், அதை ஓட்ட மிக எளிதாக உள்ளது. இது, யதார்த்தமான வித்தியாசமான உணர்வை உங்களுக்கு தரும். 




சாலையை தவிர செப்பனிடப்படாத மற்ற மேற்பரப்புகளில் இதை ஓட்டக்கூடாது. ஏனெனில், அதன் ஏர் சஸ்பென்ஷன் கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகரிக்க உதவுகிறது. மற்ற டெஸ்லா கார்களை போல, இந்த காரிலும் தன்னியக்க பைலட் மூலம் சுயமாக ஓட்டும் திறன் கொண்ட தொழில்நுட்பம் உள்ளது. ஒரே முறை, சார்ஜ் போட்டால் போதும், 500 கிமீகளுக்கு மேல் செல்லலாம்.


இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மாடல் எக்ஸ் சொகுசு காரின் விலை கிட்டத்தட்ட ரூ. 2 கோடி இருக்கும். தனிப்பட்ட முறையில் ஏற்கனவே பல கார்கள் இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை ஒரு பிரச்னையாக இருக்காது. காரின் தோற்றம் தொடங்கி, அதன் உள்வடிவமைப்பு, ஓட்டும் அனுபவத்துக்காக நீங்கள் இந்த காரை வாங்கலாம். மற்ற பாரம்பரிய சொகுசு எஸ்யூவி கார் போல் இல்லாமல், தனி ரகமாக இருக்கும்.                                 


 


Car loan Information:

Calculate Car Loan EMI