Whatsapp Update: ஒரே போனில்  இரண்டு வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான, புதிய அப்ட்டேட்டை மெட்டா விரைவில் அறிமுக்கப்படுத்தப்பட உள்ளது.


வாட்ஸ் அப்:


தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.


ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ் அப் கணக்குகள்:


அதன்படி, ஒரே போனில் இரண்டு வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்துவது போன்று புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது. இது தொடர்பான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழலில் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளரால் ஒரே கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும்.  முன்னதாக, வெவ்வேறு தொலைபேசி எண்களைக் கொண்ட இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்த,  பயனர்கள் கட்டாயம் இரண்டு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டி உள்ளது.  இரண்டு தொலைபேசிகளை பயன்படுத்துவது ஒரு தொந்தரவாக இருக்கும். குறிப்பாக இரட்டை சிம் விருப்பங்கள் உள்ளவர்களுக்கு, குளோன் செய்யப்பட்ட WhatsApp செயலிகளை பயன்படுத்துவது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். அதற்கு தீர்வு காணும் வகையில் தான் இந்த புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.


எப்படி பயன்படுத்துவது?


 QR குறியீடு பொத்தானுக்கு அருகில் உள்ள அம்புக்குறி ஐகானைத் தொடுவதன் மூலம் பயனர்கள் புதிய WhatsApp கணக்கைச் சேர்க்கும் திறனைப் பெறுவார்கள். அதே மெனுவில் வேறு கணக்கிற்கு மாறுவதும் எளிதாகிவிடும்.  பின்பு லாக் -அவுட் செய்யும் வரை பயனர் அதே கணக்கில் தான் நீடிப்பர். இந்த அம்சம் பயனர்களுக்கு பல வாட்ஸ்-அப் கணக்குகளை நிர்வகிக்கும் வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட அரட்டைகள், பணி உரையாடல்கள் மற்றும் பிற செய்திகளை ஒரே சாதனத்தில் ஒருங்கிணைக்க அவர்களுக்கு உதவும். ஒவ்வொரு கணக்கிற்கான நோடிபிகேஷனும் தனித்தனியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மெட்டா அறிவுறுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Netflix Subscription Plan: போச்சா! மீண்டும் சந்தா கட்டணத்தை உயர்த்திய நெட்பிளிக்ஸ்... இந்தியாவுல எவ்ளோ?