2023 உலகக் கோப்பையின் 17வது போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது. புனேயில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக விராட் கோலி சதம் அடித்து சாதனை படைத்தார். 97 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார். 


உலகக் கோப்பையில் ஒரு அணிக்கு எதிராக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி, சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். கென்யாவுக்கு எதிராக சச்சின் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கென்யாவுக்கு எதிராக சவுரவ் கங்குலியும் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா இரண்டு சதங்கள் அடித்துள்ளனர்.


உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த இந்திய அணியில் நான்காவது இடத்தை கோலி எட்டியுள்ளார். கோலி 3 சதங்கள் அடித்துள்ளார். ஷிகர் தவான் 3 சதங்களும் அடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 7 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்களுடன் 2வது இடத்திலும், சவுரவ் கங்குலி 4 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். 


விராட் கோலி குறித்து கேஎல் ராகுல்:


வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது 48வது சதத்தை பூர்த்தி செய்தார் விராட் கோலி. விராட் கோலி நேற்றைய போட்டியில் சதம் அடிக்க வேண்டும் என்று விளையாடவில்லை. இந்திய அணி வெற்றிபெற்றால் போதும் என்ற மனநிலையிலேயே இருந்தார். அதன் காரணமாக, விராட் கோலி ஒரு சிங்கிள் எடுத்து மறுபுறத்தில் இருந்த கே.எல்.ராகுலை பேட்டிங் ஆட அழைத்தார். ஆனால் கேஎல் ராகுல் விராட் கோலியை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்தார். வங்கதேசத்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, விராட் கோலியிடம் சிங்கிள்ஸ் எடுக்க மறுத்ததை கேஎல் ராகுல் கூறினார். அதன் பிறகு விராட் கோலி தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 48வது சதத்தை அடித்தார்.






இதுகுறித்து பேசிய கே.எல். ராகுல், நீங்கள் சிங்கிள் எடுக்க அழைத்தால் நான் வரமாட்டேன் என்று நான் விராட் கோலியிடம் சொன்னேன். அதற்கு, விராட் கோலி சிங்கிள் எடுக்கவில்லை என்றால் மக்கள் என்னை தவறாக நினைப்பார்கள். இதைச் செய்வதன் மூலம் நான் எனது தனிப்பட்ட சாதனைக்காக விளையாடுகிறேன் என்று மக்கள் கூறுவார்கள் என்று கூறினார். அப்போது நான், போட்டியில் எப்படியும் நாம் வெற்றிபெற்றுவிடுவோம். உங்களுக்கு சதம் அடிக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதை அடித்துவிடுங்கள் என்றேன். பின்னர் விராட் கோலி ஒப்புக்கொண்டார். அவரது 48வது சதத்தையும் பூர்த்தி செய்தார்.


இதையடுத்து விராட் கோலி சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், இந்திய அணி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பெற்றது.