Food Delivery Drones | இனி டெலிவரி செய்பவர்களுக்கு  பதிலாக  ட்ரோன்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம்..!

நீண்ட காலமாக இருந்து வரும் ட்ரோன்களின் தொழில்நுட்ப திறனை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிதான்  இந்த“ட்ரோன் டெலிவரி “ என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற இணையவழி டோர் டெலிவரி நிறுவனங்களையே சார்ந்துள்ளனர்.விரும்பிய உணவுகளை, விரும்பிய கடைகளில் தேர்வு செய்தால்போதும் , ஆர்டர் செய்தவர் இருக்கும் இடத்திற்கே உணவுகளை நேரடியாக கொண்டு வந்து தந்துவிடுவார் டெலிவரி ஏஜென்ட். இந்நிலையில் டெலிவரி ஏஜெண்ட்களை போலவே நேரடியாக உணவுகளை டெலிவரி செய்ய ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது ஸ்விக்கி நிறுவனம். இதன் மூலம் வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் உணவுகளை பறந்து வந்து ட்ரோன்கள் டெலிவரி செய்துவிடுமாம்.  ஸ்விக்கி மட்டுமல்லாது சொமாட்டோ, அமேசான் போன்ற பல நிறுவனங்கள் இவ்வகை ட்ரோன் டெலிவரி முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

பெருநகரங்களில் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக  உணவுகளை சரியான நேரத்தில் டெலிவரி செய்யவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இது குறித்த புகார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து  அதிகரித்த வண்ணம் இருப்பதால், இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய ஸ்விக்கி நிறுவனம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில்  அன்ரா டெக்னாலஜிஸ் (ANRA Technologies) உடன் இணைந்து  ட்ரோன்கள் மூலம் உணவுகளை டெலிவரி செய்யவதற்கான ட்ரோன்களை உருவாக்கும்  முயற்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கியது ஸ்விக்கி 

 

தற்பொழுது ட்ரோன்கள் தயாரிக்கப்பட்ட நிலையில்  அவற்றின் செயல்பாடுகளை சோதனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது ஸ்விக்கி. இதற்கான அனுமதி ஸ்விக்கி நிறுனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன,  இதற்கான இறுதி அனுமதியை ஸ்விக்கியின் ட்ரோன் பங்கு நிறுவனமான  அன்ரா டெக்னாலஜிஸ் (ANRA Technologies), பாதுகாப்பு அமைச்சகம் (MoD), விமான இயக்குநரகம் (DGCA) மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MOCA) ஆகியவவை  வழங்கியுள்ளன. இன்னும் சில நாட்களில் பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் ட்ரோன் டெலிவரிக்கான முதற்கட்ட சோதனைகள் தொடங்க உள்ளன.

உணவு டெலிவரி மட்டுமல்லாது மருத்துவ பொருட்களை டெலிவரி செய்யும் முயற்சியிலும் ஸ்விக்கி நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ரோபருடன் கைக்கோர்த்துள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக இருந்து வரும் ட்ரோன்களின் தொழில்நுட்ப திறனை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிதான்  இந்த“ட்ரோன் டெலிவரி “ என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை ஓட்டம் வெற்றியடைந்த பிறகு நாட்டின் முக்கிய நகரங்களில் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்விக்கி நிறுவனம்  பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதற்கு  இந்தியா முழுவது 300 க்கும் அதிகமான கிளைகள் உள்ளன. இதில்  5 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களும், 2 லட்சத்திற்கும் அதிகமான டெலிவரி ஏஜென்டுகள் பணியாற்றி வருகின்றனர்

Continues below advertisement