அவர் வெளியிட்ட மடலில், “இன்னையோட அப்பா இறந்து 6 மாசம் ஆச்சு. அவர் விட்டுச்சென்ற வெற்றிடம் எல்லா நாளும் எல்லா இடத்துலயும் அப்படியே இருக்கு. 


போன வருஷன் நாள்பட்ட சிறுநீரக நோயின் 4 கட்டத்துல அவரு இருந்தாரு. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எங்கிட்ட வந்து,  “உங்க அப்பா அவரோட மாணவர்கள் மேலே அளவு கடந்த அக்கறை வைச்சுருந்தாரு. ஆனா அவரு மீது அவர் அக்கற காட்ட மறந்துட்டாரு”னு சொன்னாரு.  அவரோட முகத்தோட எக்ஸ்பிரஷனை வைச்சே, ஏதோ சரியில்ல அப்படிங்கிறத நான் புரிஞ்சுக்கிட்டேன். கனத்த இதயத்தோடும், கண்ணீரோடையும் நான் மருத்துவமனைய விட்டு வெளியே வந்தேன். 


நான் பலசாலியாவும், தைரியசாலியாவும்தான் வளர்ந்தேன். ஆனா சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஒரு பயம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அது அப்பாவோட இறப்பு. அத சந்திக்கிற அளவுக்கான தைரியம் எங்கிட்ட இல்ல. அன்னைக்கு மருத்துவமனையில நின்னப்ப அந்த நாள் இதுதானோ அப்படி நினைச்சேன். அம்மாவும் அப்பாவும் ஒரு வாழ்க்கைத் தம்பதி எப்படி வாழனுங்கிறதுக்கு  உதாரணமா வாழ்ந்தாங்க. அம்மாவோட ஒரே விருப்பம் என்னோட கல்யாணத்த பார்க்கனும். அதனாலதான் என்னோட வெட்டிங் லாக்டவுண் ல நடந்துச்சு.. 






அவரு மகிழ்ச்சியா இருக்குறதுக்கு தேவையான அத்தன விஷயத்தையும் நாங்க செஞ்சோம். அவருக்கு நிறைய ஆச்சரியங்களைக் கொடுத்தோம். அதே மாதிரி அவர் எங்க கூட நீண்ட நாள் வாழுறதுக்கு தேவையான அத்தன விஷயங்களையும் செஞ்சோம். ஆனா கடவுளடோட கேம் ஒட்டுமொத்தமா வேற ஒன்னா இருந்துச்சு. அவர் கடந்த வருஷம் இதே நாள்ல எங்கள விட்டு போனாரு. அவருதான் எனக்கு சிறகுகள தந்து பறக்க வச்சாரு. அவரு இல்லாம லைஃப் ரொம்ப மாறியிருக்கு.. உங்கள வாப்பா -னு கூப்பிடுறத நான் ரொம்ப மிஸ் பண்றேன்..  இந்த நாள்ல எங்க அப்பாவோட பெயர்ல  டாக்டர். கே. நிலாமுதீன் கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்த தொடங்குறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாக, தனியார் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற ஆரவ் அதில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் சில படங்களில் நடித்தார். அவர் கொரோனா 1 அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் நடிகை ராஹியை திருமணம் செய்துகொண்டார்.